அழகே அழகு
வாழைப்பழம் மாஸ்க்
வாழைப்பழம் மற்றும் வெண்ணை கலந்த கலவை உங்கள் முகத்திற்கு ஒரு இயற்கையான பளபளப்பினைத் தரும். ஒரு வாழைப்பழம் ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெய் வாழைப்பழத்தை எடுத்து அதனை மிக்சியில் போட்டு அரைத்து அதனுடன் பட்டர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையை ஒரு பிரெஷினை பயன்படுத்தி முகத்தில் அப்ளை செய்து பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் விட்டு பின்பு குளிர்ந்த நீரில் அலசுங்கள் இந்த மாஸ்கினை கழுவிய பின்பு முகத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இதனை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.
பாதம் ஃ பேஷியல்
பாதம் பருப்பை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து தோலை நீக்கி அரைத்து கொள்ளுங்கள் இதனுடன் சிறிது கடலை மாவு பால் மற்றும் எழுமிச்சை சாறு சேர்த்து தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முகத்தில் பூசி வந்தால் நீங்கள் பியூட்டி பார்லர்க்கு போக வேண்டிய அவசியமே இல்லாமல் போக கூடும்.
பருக்களை ஒழிக்க ஐஸ் பேக்
ஒரு துணியில் ஐஸ்காட்டியை வைத்து பருக்கள் சிறிது நேரம் வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்தல் பருக்கள் மறையும். பட்டை பொடியை தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து இரவில் படுக்கும் பொது பருக்கள் மீது தடவி மறுநாள் காலையில் முகத்தை கழுவினால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.
உருளைக்கிழங்கு மஞ்சள் பேஸ்ட்
உருளைக்கிழங்கை சாறுடன் மஞ்சள் சேர்த்து பேஸ்ட் செய்து இதனை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து நன்கு காயும் வரை பொறுத்திருந்து கழுவவும். முகத்தில் இருக்கும் சேதங்களை மாற்றி பளிச் பளிச் பால் போல மென்மையாக மாறிவிடும்.