காய காணிக்கை
காய காணிக்கை
கைகள் பல வகையாம்
வருவது வாழ்க்கையிலாம்
முதலில் வருகையாம்
முடிவில் இயற்கையாம்
இடையில் வேடிக்கையாம்
இறைவன் வாடிக்கையாம்
அன்னையின் குடங்கையிலே
ஆயுள் தொடங்கையிலே
அம்பிகை கை பிடிக்கையிலே
நம்பிக்கை நடக்கையிலே
பள்ளி சென்று படிக்கையிலே
பாடம் சொல்லிக் கொடுக்கையிலே
உலகை உணர்கையிலே
உள்ளம் உவகையிலே
இதயத்தின் இறக்கையிலே
பருவத்தில் பறக்கையிலே
இரு மனம் இணைகையிலே
இருவரும் துடிக்கையிலே
இன்னொரு வருகையிலே
இன்பம் இரு கையிலே
முடிவை நோக்கையிலே
முடியாமல் படுக்கையிலே
கோரிக்கை வைக்கையிலே
கோடி கை தடுக்கையிலே
கண்டு கொள்ளாத கொள்கையிலே
கடமை முடிப்பான் அழுகையிலே.
செ.காமாட்சி சுந்தரம்