இன்றைய ராசி பலன்கள் ( 22 டிசம்பர் வெள்ளிக்கிழமை 2023 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் டிசம்பர் 21ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

சோபகிருது வருடம் மார்கழி மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 22.12.2023,சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 10.09 வரை தசமி. பின்னர் ஏகாதசி இன்று அதிகாலை 12.20 வரை ரேவதி. பின்னர் இரவு 11.18 வரை அஸ்வினி. பிறகு பரணி பூரம் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

ஆடம்பரச் செலவுகள் செய்யாதீர்கள். சிக்கனமாக இருந்து கடன்களை கட்டுவீர்கள். வேலையிடத்தில் உணர்ச்சிவசப்படாதீர். வியாபாரத்தைக் கண்ணும் கருத்துமாக நடத்துவீர்கள். காதலியிடம் கூட கஞ்சத்தனமாக நடந்து கொள்வீர்கள். மேலதிகாரியிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். வேலை அமைந்தாலும் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே!

எவ்வளவுதான் பக்குவமாக நடந்தாலும் பணத்தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவீர்கள். வாகனங்கள் ஓட்டும்போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். எதிலும் தலையிடாமல் மரியாதையை காப்பாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சரிவை சந்திப்பீர்கள். வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட தாயாரை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள்.

மிதுன ராசி அன்பர்களே!

அனைத்துவிதமான குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். நவீனமான பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டு தேவையற்ற நெருக்கடியை தவிர்ப்பீர்கள். இயற்கை உணவுகளை உட்கொள்ள விரும்புவீர்கள். எந்தக் காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நல்ல பலன் பெறுவீர்கள்.

கடக ராசி அன்பர்களே!

வியாபாரத்தை செழிப்பாக நடத்துவீர்கள். பங்குச்சந்தையில் நல்ல வருமானம் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் நண்பர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். காதலியோடு இருந்த கருத்து வேறுபாட்டை தீர்ப்பீர்கள். பணியினால் ஏற்பட்ட சுவாச பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். வீட்டில் உள்ளவர்களின் மனதை புரிந்து கொண்டு நடப்பீர்கள். மகிழ்ச்சியை அதிகரிப்பீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே!

கூட இருந்து குழி பறிக்கும் கூட்டத்தை அடையாளம் காண்பீர்கள். வேலை இடத்தில் செய்த சின்ன தவறால் தண்டனை பெறுவீர்கள். வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் அவமானப்படுவீர்கள். அலைச்சல் அதிகமாகி மனதளவில் சோர்வடைவீர்கள். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தியை பெறுவீர்கள். சந்திராஷ்டம நாள்.

கன்னி ராசி அன்பர்களே!

வயது மூத்தவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். தொழிலை விரிவுபடுத்த அதிக முதலீடு செய்வீர்கள். பொருளாதாரத்தை உயர்த்தி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை பெறுவீர்கள். அன்புக்குரிய காதலி விருப்பப்பட்ட அணிகலனை வாங்கி கொடுப்பீர்கள். பெற்றோர்களில் உடல் நோயை தீர்க்க மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வீர்கள்.

துலா ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளை களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நண்பர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய வாடிக் கையாளர்கள் அறிமுகமாவார்கள். மகாலட்சுமி வழிபாடு நன்று.

விருச்சிக ராசி அன்பர்களே!

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். சிறிய சகோதரியின் திருமணத்தை நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். தொல்லை கொடுத்த நோயிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தை விருத்தி செய்ய புதிய நண்பர்களை சேர்ப்பீர்கள். மனைவியின் பேச்சால் மனக்கலக்கம் அடைவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே!

பிரச்சனைகளில் இருந்து விலக நிலைத்தாலும் ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டால் பண இழப்பை அடைவீர்கள். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு மன சஞ்சலப் படுவீர்கள். புதிய முதலீடுகளை செய்வதில் சிரத்தை காட்டாதீர்கள். எதிரிகளின் சூழ்ச்சியால் வெளிவட்டார செல்வாக்கில் சரிவை சந்திப்பீர்கள்.

மகர ராசி அன்பர்களே!

பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தால் பெருமைப்படுவீர்கள். ஐ டி தொழில்துறையின் அபார வளர்ச்சியால் ஊதிய உயர்வை பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி காண்பீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கத்தில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் பண வரவால் பழைய கடன்களை அடைப்பீர்கள்.

கும்பராசி அன்பர்களே!

கோயில் திருப்பணிகளுக்கு பண உதவி செய்து பெரியோர் மனதில் இடம் பிடிப்பீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். காதலியின் மனம் நோகாமல் நடந்து கொள்வீர்கள். வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மனைவிக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வீர்கள்.

மீனராசி அன்பர்களே!

வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி லாபத்தை அள்ளுவீர்கள். தொழிலில் விறுவிறுப்பான முயற்சிகளால் எதிரிகளை திணறடிப்பீர்கள். வீட்டை புதுப்பிப்பீர்கள். புதிய மனை வாங்குவீர்கள். மகள் ஆசைப்பட்ட ஸ்கூட்டியை வாங்கி கொடுப்பீர்கள். மருத்துவ ரீதியான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். காதலியை கரம் பிடிக்க ஏற்பாடு செய்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!