20க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து..! | நா.சதீஸ்குமார்

 20க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து..! | நா.சதீஸ்குமார்

சென்னை விமான நிலையத்தில் புயலின் எதிரொலியாக விமானிகள் மற்றும் பயணிகள் இல்லாததால் 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இன்று வழக்கமான விமான சேவைகள் தொடங்கிய போதிலும், போதிய பயணிகள் இல்லாமலும், விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள் வராததாலும் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்களும், சென்னைக்கு வர வேண்டிய 11 விமானங்களும், மொத்தம் 22 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டன.

சென்னையிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 6:30 மணிக்கு விஜயவாடா இண்டிகோ ஏர்லைன்ஸ், காலை 6:45 மணி விசாகப்பட்டினம் இண்டிகோ ஏர்லைன்ஸ், காலை 8 மணி டெல்லி, காலை 8:10 மணி கொச்சி, காலை 8:45 மணி பெங்களூர், காலை 9:05 மணி திருவனந்தபுரம், காலை 9:45 மணி புனே, காலை 10:10 மணி கோவை, பகல் 1:15 மணி சூரத், பகல் 1:25 மணி வாரணாசி ஆகிய 11 புறப்பாடு விமானங்களும், இதைப்போல் இந்த 11 வருகை விமானங்களும், மொத்தம் 22 விமானங்கள், இன்று சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதைப்போல் அந்தமான், டெல்லி தூத்துக்குடி அகமதாபாத் உள்ளிட்ட சுமார் பத்து விமானங்கள் இரண்டு மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் செல்கின்றன.

இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, சென்னை விமான நிலையத்திலிருந்து விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட விமான ஊழியர்கள் சிலர், வராததாலும், வேறு சிலர் தாமதமாக வருவதாலும், அதோடு பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், இன்று காலையில் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் மாலையிலிருந்து வழக்கமான சேவைகள், குறித்த நேரத்தில் இயக்கப்படுகின்றன என்று கூறுகின்றனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...