அழகே அழகு
கழுத்தை பராமரிக்க நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான். அழகாக முகத்தை வைத்துக் கொண்டாலும் கழுத்து வேற நிறம் முகம் வேற நிறம் என்று அவதி படுவார்கள் இதற்கான சில குறிப்புக்கள் சிறிதளவு ரோஸ்வாட்டர் சிறிது வெங்காயச்சாறு ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு இவற்றுடன் சிறிதளவு பயத்தை மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள் பிறகு அடுத்த பாத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி லேசாக மசாஜ் செய்ய நாளடைவில் கருமை நீங்கி பளபளப்பு கூடிவிடும் .
கரிசலாங்கண்ணி பொன்னாங்கண்ணி அவுரி நெல்லி பொடுதலை ஆகியவை முறைப்படி இடித்து சாறு சம பங்கு எடுத்து அதில் கடுக்காய் தான்றிக்காய் தூள் கலந்து அனைத்தும் சேர்ந்து அளவில் இரண்டு பங்கு சுத்தமான தேங்காயை எண்ணெய் ஊற்றி பதமாக காய்ச்சு வடிகட்டி இதை தினமும் தினமும் தலைக்கு தேய்த்து வர இளநரை மாறி பொடுகு முடிகொட்டுதல் என அனைத்தும் நீங்கி தலைமுடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
பண்ணீரை பஞ்சினால் உதடுகளில் பூசி வந்தால் உதடுகள் மிகவும் அழகாகவும் பொலிவாகவும் ஜொலிக்கும்.
வெந்தையம் சாப்பிடலாம் அதில் குளுகோஸ் மெட்டபாலிசம் தன்மை உள்ளது மேலும் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் ஹார்மோனை அதிகமாக சுரக்க உதவுகிறது.
பாதத்தில் வெடிப்பு நீங்க எழுமிச்சைப் பழத்தோலால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நன்றாகத் தேய்த்து வர பாத வெடிப்புகள் வெகு விரைவில் குணமடையும்.
நம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேருகிடுது அதுபோல பிரவேசத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும் இவர்கள் அனைவரும் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனகற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் மெலிந்து அழகு கூடுதலா கூடும்.
அண்ணாச்சிப்பழம் பைட்டோ கெமிக்கல்களையும் நுன்னூட்ட சத்துக்களையும் கொண்டுள்ளது. இது வயதாவதற்கான முதல் அறிகுறிகளை அகற்ற உதவி செய்கிறது. முகத்தை சுத்தம் செய்து அந்த பழ துண்டுகளை ஐந்து நிமிடங்கள் முகத்தில் நன்கு தேய்க்கவும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை சருமம் பாதுகாக்கப்படுவதோடு பொலிவும் பெரும்.
பண்ணீரில் சருமத்தை இருக்கும் பண்புகள் உள்ளது. மேலும் சருமத்தை ஆரோக்கியமாக ஒளிர செய்யும் இதனை சந்தன பொடியுடன் கலந்து பயன்படுத்தும் போது சரும கரும்புள்ளிகளை குறைப்பதோடு சரும நிறுத்தியும் பராமரிக்க உதவும்.