ஆரோக்கியம்
தினமும் ஒரு ஆப்பிள் எடுத்து கொள்வதன் மூலம் மருத்துவர் செலவு மிச்சமாகும்
தினமும் ஒரு எலுமிச்சை எடுத்துக்கொண்டால் கொழுப்புக்கு குட்பை சொல்லலாம்.
பால் தினமும் ஒரு டம்ளர் எடுத்து கொண்டால் அது நம் எலும்புகளுக்கு பலம் கொடுக்கும்.
ஒரு துளசி தினமும் எடுத்து வர புற்றுநோய்க்கு கவசமாக மாறக்கூடும் .
கீரைகளில் ராணி என பரட்டை கீரையை சொல்வார்கள். அதில் குறைந்த கலோரி நிறைய நார்ச்சத்து பூச்சியம் அளவு கொழுப்பு சத்து நிறைந்தது உடல் எடை பராமரிக்க விரும்புவோர் தினம் இதனை சாப்பிடலாம். இது எளிதில் ஜீரணமாகக் கூடியதாகும் அதிகமான இரும்புச்சத்து இதில் உள்ளது. ஈரல் புற்றுநோய் எலும்பு குறைபாடு ஆஸ்த்மா போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவும்.
பேரிக்காயை பொட்டாசியத்தின் ஓர் அற்புதமான மூலமாகும் இது ரத்த அழுத்தத்தைக் குறைகிறது. பேரிக்காயில் உள்ள ஃபிளவனாய்டுகள் டைப்-2 நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
அஜீரணக் கோளாறுக்கு தீர்வு வெற்றிலை இரண்டு அல்லது மூன்று எடுத்து அதனுடன் ஐந்து நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சு குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர்களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும் உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
தூக்கம் வர உங்களுக்கு போதுமான தூக்கம் வரவில்லை என்றல் லெப்டின் மற்றும் கிரேலின் என்ற ஹார்மோன்கள் இதற்குக் காரணம் வயிறு நிரம்பியிப்பதை லெப்டின் வெளிப்படுத்துகிறார் சரியாக தூங்காதபோது லெப்டின் வேலை செய்யாது. தின்பண்டங்களை சாப்பிடுவதற்கு பதிலாக மூலிகை தேநீர் அல்லது சாறு குடிக்கவும்.
தினமும் இரண்டு சப்போட்டா பழங்கள் எடுத்து கொண்டால் குடல் புற்றுநோய் ஏற்படாது. இதில் கால்சியம் பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தும் சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பகினால் சளி குணமாகும் மேனியைப் பளபளப்பாக வைக்கும் தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நல்லது.