அடிமைப்பெண்
மக்களின் இதயக்கனியாய் நம் மனதில் மன்னாதி மன்னனாய் வீற்றிருக்கும் எம்.ஜி.யார் என்ற மூன்றெழுத்தின் அதி முக்கியமான அவதாரங்களில் ஒன்று, கம்பீரக்குரல் கவர்ச்சிக் குரலாய் மாறிய அந்த குண்டடிபட்ட தருணங்களுக்கு முன் 64ல் துவங்கப்பட்ட ஐரோப்பிய வரலாறுகளில் அடிமையின் காதல் என்று நாவலாக வெளிவந்த கதைதான் வில்லனாக நம்பியார், பவளநாட்டு அழகியாக கே.ஆர்.விஜயா, ரத்னா, கதாநாயகியாக சரோஜாதேவி, ஜெயலலிதா என்று கலக்கல் காம்பினேஷனில் உருவான படம்தான் அடிமைப்பெண். அரைமணி நேரப் படத்தின் சுருள்கள் பெட்டியில் அடைப்பட்டு இருக்க, நம் கதாநாயகரோ குண்டுகள் துளைக்கப்பட்டு மருத்துவமனையில் அவர் தன் மீட்பின் வீரியத்தில் திரும்பிய பிறகு மீண்டும் கிடைப்பில் போடப்பட்ட நான்கு படங்களில் முதலாவதாக கையிலெடுக்கப்பட்ட படம்தான் அடிமைப்பெண்.
போராட்டம் சூழ்ந்த வாழ்வுதான் சினிமா, அதற்கு எந்த முண்ணனியும் விதிவிலக்கு இல்லை எத்தனையோ இன்னல்களை கடந்து திரையுலகில் கால்பதித்த அவர் நாடகத்துறையை மிகவும் காதலித்தார். இன்பக்கனவு என்ற ஒரு நாடகத்தை எம்.ஜி.யார் அவர்கள் சில இடங்களில் நடத்தி வந்தார். அதில் ஒரு காட்சியில் எண்ணெயை உடல் முழுவதும் பூசியிருந்த குண்டுமணியை தலைக்கு மேல் லைவ்வாக தூக்கிப்பிடிப்பார் இந்த காட்சி பெரும் வரவேற்பு ரசிகர்களின் கூக்குரலில் எம்.ஜி.யார் அவர்களின் ஆற்றலும் வலிமையும் ஒருசேர ஒலிக்கும் அப்படியொரு நாள் நாடகத்தின் காட்சி அரங்கேறிக்கொண்டு இருக்கும் போது அளவுக்கதிகமான எண்ணெயின் உபயத்தால் எம்.ஜி.யாரின் கையில் இருந்து நழுவினார் குண்டுமணி, அவர் கீழே விழுந்தால் குண்டுமணியின் தலையில் அடிபடுவது நிச்சயம் இதையுணர்ந்த எம்.ஜி.ஆர் தன் காலை நடுவில் வைத்துவிட குண்டுமணி உயிர்தப்பினார் ஆனால் எம்.ஜி.யாரின் கால் எலும்பு முறிந்தது. கால் குணமாகாது எலும்பு கூடாது என்று மற்றவர்கள் திகைத்திருக்க மருத்துவமே வியக்கும் அளவிற்கு குணமாகி நடித்தார்.
தொடரும்