வாழைப்பூ உருண்டை குழம்பு
தேவையான பொருள்கள்:
வாழைப்பூ- 1
துவரம் பருப்பு- 100 கிராம்
கடலை பருப்பு- 100 கிராம்
கடுகு, வெந்தையம் தாளிக்க
சாம்பார்த்தூள் 1 தேக்கரண்டி
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும் . துவரம் பருப்பு கடலை பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து காஞ்ச மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். அதனுடன் வாழைப்பூ உப்பு சேர்த்து உருண்டையாக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும் , புளியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைத்து சாம்பார்தூள் சிறிது சேர்த்து கொதிக்க வைத்து அதில் வேக வைத்த உருண்டைகளைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும், மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் இவற்றை தாளித்து குழம்பில் சேர்த்து சுவையான வாழைப்பூ உருண்டை குழம்பை சுவைக்கவும் …