இன்றைய முக்கியச் செய்திகள் சில…..

 இன்றைய முக்கியச் செய்திகள் சில…..

பெட்ரோலியம் அல்லாத மாற்று எரிசக்தி பயன்பாட்டை இந்தியா 3 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கும். பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி.

சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு. டெங்கு பாதித்த சிறுமியின் சசோதரன் உள்ளிட்ட இருவருக்கு தீவிர சிகிச்சை.

கிலோ 70 ரூபாயை தாண்டி விற்கும் பெரிய வெங்காயம். மகாராஷ்டிரா, ஆந்திராவிலிருந்து அதிக லாரிகளில் வெங்காயம் வருவதால் விலை குறையும் என தமிழக அரசு உறுதி.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆதரவு. நீதிமன்றம் நியாயம் அளிக்கும் என நம்புவதாக கருத்து.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்ற விவகாரம்‌. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவு.


கடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை காவலர் லத்தியால் தாக்கியதாக குற்றச்சாட்டு. மண்டை உடைந்த இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.

இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார். பாகிஸ்தான் பிரதமர் இமரான்கானை சந்தித்த பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் மீண்டும் பேச்சு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...