டெல்லியில் செயற்கை மழை? | நா.சதீஸ்குமார்

 டெல்லியில் செயற்கை மழை? | நா.சதீஸ்குமார்

தலைநகர் டெல்லியில் நேற்று பெய்த மழை அங்குக் காற்று மாசை வெகுவாக குறைத்துள்ள நிலையில், அந்த மழையைச் சுற்றியே பல்வேறு சர்ச்சைகளும் கேள்விகளும் எழுந்துள்ளன.

நமது தேசிய தலைநகரான டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் வந்துவிட்டால் காற்று மாசு தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அங்கே காற்றின் தரம் மிக மோசமான நிலைக்குச் செல்லும்.

டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதிகரிக்கும் வாகனங்கள், தொழிற்சாலைகள், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவது என இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இதைக் குறித்த மத்திய அரசும் டெல்லி அரசும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்தாண்டும் கூட தலைநகர் டெல்லியில் கிட்டதட்ட அதே நிலை தான். கடந்த வாரம் டெல்லியில் பல இடங்களில் காற்றின் தரம் மிக மோசமாக இருந்தது. பல இடங்கள் அங்கே முழுமையாகப் புகை மூட்டத்தால் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கே மாஸ்க் போடாமல் வெளியே செல்வதே ஆபத்தாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று டெல்லி மக்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், காற்றின் தரம் மோசமாக இருப்பதால் அங்கே பள்ளிகளுக்கும் கூட விடுமுறை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே டெல்லியில் நேற்று திடீரென பெய்த மழை பொதுமக்களுக்கு மிகப் பெரியளவில் நிம்மதியைக் கொடுத்துள்ளது. ஏனென்றால் பொதுவாக மழை பெய்யும் போது காற்றில் இருக்கும் மாசு துகள்கள் பூமியில் விழும். இதனால் காற்று மாசு வெகுவாக குறையும். டெல்லியிலும் கூட நேற்று மழை பெய்த நிலையில், காற்று மாசு வெகுவாக குறைந்தது. இது மழை நமக்கு எந்தளவுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது என்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது.

உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகராக இருந்த டெல்லியில் மழையைத் தொடர்ந்து காற்றின் தரம் வெகுவாக முன்னேறி இருக்கிறது. அங்கே கடந்த வாரம் முழுக்க காற்றின் தரம் 400-500 என்ற ரேஞ்சிலேயே இறுந்தது. ஆனால், இப்போது பெய்த மழையைத் தொடர்ந்து டெல்லியில் காற்று மாசு 127ஆகக் குறைந்துள்ளது. இது பொதுமக்களிடையே நிம்மதியைத் தந்தாலும் கூட மற்றொரு பக்கம் இது பெரிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

அதாவது டெல்லியில் பெய்த இந்த மழை இயற்கையாகப் பெய்த மழையா அல்லது செயற்கை ரசாயனங்கள் மூலம் பெய்த மழையா என்பதே இங்குப் பலருக்கும் கேள்வி. டெல்லியில் காற்று மாசை குறைக்கச் செயற்கை மழையை ஏற்படுத்துவது தொடர்பாக ஐஐடியுடன் டெல்லி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டெல்லியில் செயற்கை மழையை அரசு உருவாக்கி இருக்குமோ என்று பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

இதற்கிடையே டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இது செயற்கை மழை இல்லை என்பதை விளக்கிய கோபால் ராய், செயற்கை மழைக்கு பல்வேறு அனுமதிகளைப் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “செயற்கை மழையை ஆரம்பிக்க நாம் பல்வேறு அனுமதிகளைப் பெற வேண்டாம். அதையெல்லாம் ஒரே நாளில் எல்லாம் செய்ய முடியாது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...