பிரபல நடிகர் கங்கா காலமானார்..!
1980களில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கங்கா.டி ராஜேந்தரின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவராக வலம் வந்த கங்கா, ஹீரோ உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் கங்கா திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
கங்காவின் மறைவு செய்தியை அறிந்த திரையுலகினர், அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கங்கா. ஹீரோ, குணச்சித்திரம் உட்பட பல கேரக்டர்களில் நடித்துள்ள கங்கா, டி ராஜேந்தரின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். டி ராஜேந்தர் இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘உயிருள்ள வரை உஷா’ படம் கங்காவுக்கு மிகப் பெரிய அறிமுகம் கொடுத்தது.
மேலும் பி. மாதவன் இயக்கி தயாரித்த ‘கரையைத் தொடாத அலைகள்’, விசுவின் ‘மீண்டும் சாவித்திரி’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஹீரோவாக குறைந்த படங்களே நடித்தாலும், செகண்ட் ஹீரோ, கெஸ்ட் ரோல் என தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். ஒருகட்டத்தில் சீரியல்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் கங்கா திருமணம் செய்துகொள்ளாமல் தனது சகோதரர் குடும்பத்துடன் வாசித்து வந்துள்ளார். இதனிடையே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே உயிரிழந்துள்ளார். கங்காவின் மறைவு அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல் கங்காவின் மறைவு செய்தியை அறிந்த திரையுலகினர், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து கங்காவின் உடல் அவரது சொந்த ஊரான சிதம்பரம் கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.