மூன்று ஆப்பிள் துண்டங்கள் மூன்று கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் பளபளக்கும்.
மருதாணி அரைத்து வைப்பதற்கு முன்பாக கைகளை எழுமிச்சை பழச்சாற்றில் கழுவி காயவிட்டு பின் மருதாணி இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாக பிடிக்கும்.
சாதம் வடித்த நீருடன் சீகைக்காய் பவுடரைக் கலந்து தேய்த்து வாரம் இரண்டு நாள் குளித்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.
உதடுகளை பாதுகாக்க சோற்றுக் கற்றாழை சார் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லையோ உதடுகளில் தடவினால் உதடு ஈரப்பதத்துடன் வெடிக்காமல் இருக்கும்.
ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி தினசரி தேய்த்து ஆறு மணி நேரம் கழித்துக் குளித்தால் முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
இஞ்சியை இடித்து சாறு எடுத்து கொதிக்க வைத்து சற்று சுண்டியதும் அதில் தேன் கலந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும் மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால் தொப்பை குறைந்து விடும்.
வாழைப்பழத்துடன் பால் மற்றும் கோதுமை மாவு கலந்து இந்த கலவையை முகத்தில் தடவி பாத்து நிமிடங்கள் வைத்து விட்டு கழுவவும் முகம் பளபளப்பாகவும் இருக்கும்.
மஞ்சள் தூளை பாலில் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர முகம் அழகாக மாறிவிடும்.
மூன்று ஆப்பிள் துண்டுகள் மூன்று கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் போட்டு இதனுடன் அரை எலுமிச்சை சாறு கலந்து நாள்தோறும் காலையில் குடித்து வர கன்னம் தங்கம் போல் மின்னிடும்.
கடலைமாவு தினமும் இரவில் தூங்கும் முன் கடலை மாவுடன் நீர் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடம் கழித்து கழுவி வர அழகு கூடும்.
உப்பையும் மிளகையும் பொடி செய்து எலுமிச்சைபழச்சாறு சேர்த்து மூன்று நாள்கள் வெளியில் காய வைக்கவும் பின் நன்றாக காய்ந்ததும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குழைத்து தூங்கப்போகும் முன் தலையில் தேய்த்துக் காலையில் குளிக்கவும் இதை தொடர்ந்து செய்தால் வழுக்கையான இடத்தில் முடி வளரும்.
