சிவப்பரிசி வடகம் ரெசிபி!
சத்துக்கள் :-
சிவப்பு அரிசியில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும்
சிவப்பரிசியில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் நிறைந்துள்ளன.
தேவையானவை:
சிவப்பு புழுங்கல் அரிசி – ஒரு கப்,
ஜவ்வரிசி – அரை கப்,
பச்சை மிளகாய் – 2,
சீரகம் – 2,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சிவப்பு புழுங்கல் அரிசியைக் களைந்து 7 மணி நேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசியை தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த அரிசியை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். பாதி அரைபட்டதும், சீரகம், ஊறவைத்த ஜவ்வரிசி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.
பின்னர் அடிகனமான பாத்திரத்தில் நீர் ஊற்றி, கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவை சிறிது, சிறிதாக ஊற்றி கைவிடாமல் கிளறவும். இதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து குறைந்த தீயில் நன்றாக கிண்டி, வெந்ததும் இறக்கவும்.
பின்னர் முறுக்கு அல்லது இடியாப்ப அச்சில் எண்ணெய் தடவி மாவைப் போட்டு, சுத்தமான துணியில் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் பிழிந்து, வெயிலில் வைத்து, திருப்பிப் போட்டு 2, 3 நாட்கள் காயவிட்டு எடுத்தால் சுவையான சிவப்பு அரிசி வடகம் தயார்!!
—
ஹேமலதா சுந்தரமூர்த்தி