2024 ஆஸ்கருக்கு தேர்வான மலையாளப்படம்…

 2024 ஆஸ்கருக்கு தேர்வான மலையாளப்படம்…

96வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த விருது விழாவுக்கு இந்தியா சார்பில் போட்டியிட மலையாள திரைப்படமான 2018 படத்தை இந்திய தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டிக்கு போட்டிப் போட நாடு முழுவதும் பல படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதா ஷர்மா நடித்த தி கேரளா ஸ்டோரி, ஷாருக்கானின் ஜவான் உள்ளிட்ட படங்களும் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்த நிலையில், மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய 2018 படம் தற்போது அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முன்னதாக மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், நாமினேஷனுக்கு முந்தைய சுற்றுகளிலேயே அந்த படம் வெளியேறியது. கடந்த ஆண்டு குஜராத்தி திரைப்படமான செல்லோ ஸ்டோரி படம் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டும் அந்த படமும் தேர்வாகவில்லை.

இந்த ஆண்டு மே 5ம் தேதி வெளியான 2018 திரைப்படம் கேரளாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலையையும் ஒருத்தருக்கு ஒருத்தர் எப்படி உதவிக் கொண்டனர் உள்ளிட்ட விஷயங்களையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் டொவினோ தாமஸ், அபர்ணா பால முரளி, தன்வி ராம், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெறும் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டியில் போட்டி போட இந்தியா சார்பில் 2018 படத்தைThe Film Federation of India (FFI) தேர்வு செய்துள்ளது.

கேரளாவில் இந்து பெண்களை இஸ்லாமியர்களாக மதம் மாற்றி தீவிரவாதிகளாக மாற்றுவதாக உருவாக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி படத்துக்கு கடும் எதிர்ப்புகள் கேரளாவில் குவிந்த நிலையில், அந்த படமும் ஆஸ்கர் போட்டியில் இடம்பிடித்து இருந்தது. ஆனால், அந்த படத்தை தேர்வு செய்யாமல் மலையாள திரைப்படம் இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதே மிகப்பெரிய வெற்றி தான் என மலையாள திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...