“லியோ “ இரண்டாவது பாடலுக்கான ப்ரோமோ ரிலீஸ்! | தனுஜா ஜெயராமன்

 “லியோ “ இரண்டாவது பாடலுக்கான ப்ரோமோ ரிலீஸ்! | தனுஜா ஜெயராமன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இரண்டாவது பாடலுக்கான ப்ரோமோ ரிலீசாகியுள்ளது.

லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகளின் புகைப்படம் இணையத்தில் வெளியானது.
ஆனால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனமான செவ்ன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது

இந்த நிலையில் லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள்  பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகியது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனிடையே  26 வினாடிகள் கொண்ட ப்ரோமோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...