இன்றுடன் மூன்றே நாட்கள் தான் .. ரூ.2,000 நோட்டை மாத்தியாச்சா? | தனுஜா ஜெயராமன்

 இன்றுடன் மூன்றே நாட்கள் தான் .. ரூ.2,000 நோட்டை மாத்தியாச்சா? | தனுஜா ஜெயராமன்

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி மக்கள் தங்கள் கையில் இருக்கும் ரூ.2,000 நோட்டை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவோ அல்லது வங்கிகளில் பிற ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு கடைசி தேதி செப்டம்பர் 30 ஆம் தேதி தான் கடைசி நாளாம்.

செப்டம்பர் 30, 2023 அன்று 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யத் தவறினால், அக்டோபர் 1, 2023 முதல் வங்கியில் டெபாசிட் செய்ய முடியாமல் போகலாம். இதில் பல மாற்று கருத்துக்கள் இருக்கும் வேளையில் கடைசி வாய்ப்பு அளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

தன் படி செப்டம்பர் 30, 2023க்குப் பிறகும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் வசதியை ரிசர்வ் வங்கி வழங்கலாம், இருப்பினும், செப்டம்பர் 30 அன்று காலக்கெடுவுக்குள் ரூபாய் நோட்டை டெபாசிட் செய்யவோ மாற்றவோ தவறியதற்கான காரணத்தைக் கேட்கலாம்.

எனவே, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது அல்லது டெபாசிட் செய்வது நல்லது.

இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல் படி மார்ச் 31 ஆம் தேதி சுமார் 3.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது, மே 19 அதாவது 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவதாக ஆர்பிஐ வெளியிட்ட நாளில் இது 3.56 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.

இதற்கிடையில் தற்போது 3.14 லட்சம் ரூபாய் திரும்பபெறப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளது வெறும் 42000 கோடி ரூபாய் மட்டுமே என ஆகஸ்ட் மாதம் அறிக்கை வெயிட்ட நிலையில் இன்னும் 25000 கோடி ரூபாய் எஞ்சியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3 நாட்களுக்குள் முழுமையாக வங்கி அமைப்பிற்குள் வருமா என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...