ஏர் இந்தியாவில் இனி புடவைக்கு “நோ” சொல்ல போகிறார்களா? | தனுஜா ஜெயராமன்
ஏர் இந்தியாவின் புதிய சீருடை நவம்பர் 2023க்குள் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள்.
ஏர் இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் புடவையின் பயன்பாடு உள்ளது, மறைந்த ஜே.ஆர்.டி.டாடா தொடங்கினார் இயல்பாக விமானங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கர்ட், ஜாக்கெட், தொப்பி ஆகியவற்றை நீக்க வேண்டும் என திட்டமிட்ட போது இந்திய கலாச்சாரத்தின் படி புடவை சீருடையாக மாற்றியது.
ஏர் இந்தியாவின் 60 ஆண்டுகள் வரலாற்றில், விமானப் பணிப்பெண்கள் இந்திய பாரம்பரிய உடையான புடவைகளை மட்டுமே சீருடையாக அணிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் டாடா குழுமத்தின் நிர்வாகத்தின் கீழ் விமானப் பணிப்பெண்களுக்கு சீருடையில் இனி புடவையை தவிர்த்துவிட்டு நவீன ஆடைகளை விரைவில் அளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் புடவைகள் முற்றிலும் அகற்றப்படாது என்றும் கூறப்படுகிறது, இதேவேளையில் சிக்கலான புடவை உடுத்தும் முறையில் இல்லாமல் ரெடி டூ வியர் முறை கொண்டு வரப்படும் என்ற தகவலும் வந்துள்ளது. இதனால் அனைத்து ஏர் இந்தியா கேபின் க்ரூ ஊழியர்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.
ஏர் இந்தியாவின் புதிய சீருடை நவம்பர் 2023க்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த சீருடை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் இதை பிரபல ஆடை வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ரா, சீருடையைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.