மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 296 பேர் பலி

 மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால்  296 பேர் பலி

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 296 பேர் பலியாகிவிட்டனர், பலர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மாரகேஷ் பகுதியில் 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கி 296 பேர் பலியாகிவிட்டனர், பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த கட்டடங்கள் சில வினாடிகள் மட்டுமே நீடித்ததாக மக்கள் கூறுகிறார்கள்.

கட்டடங்கள் சேதமடைந்தது குறித்து வரலாற்று சிறப்பு மிக்க மாராகெக் சிவப்பு சுவர்கள் சேதமடைந்தது குறித்து மொராக்கோ நாட்டு மக்கள் வீடியோவாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அது போல் ஹோட்டல்களை காலி செய்யும் வீடியோக்களை சுற்றுலா பயணிகள் வெளியிட்டுள்ளனர்.

இப்படிக்கு நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...