நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1..!

 நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1..!

நாளை காலை விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1 சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா L1 விண்கலத்துடன் PSLV-C57 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 24 மணிநேர கவுன்டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்குகிறது. 100-120 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலன் இது, சூரியனை ஆய்வு செய்ய, செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. PSLV-XL(C57) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது.

ஆகஸ்ட் 30 , சூரியனை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட ஆதித்யா-எல் 1 மிஷன், ஒத்திகை மற்றும் உள் சோதனைகளை வெற்றிகரமாக முடித்ததாக இஸ்ரோ கூறியது. சூரியனின் கொரோனா பகுதியை ஆய்வு செய்வது இதன் முக்கிய நோக்கம் ஆகும். சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது. இந்த ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும்.

எல் 1 என்பது Sun-Earth Lagrange point ஆகும். அதாவது சூரியனுக்கும் – பூமிக்கும் இடையில் உள்ள பாயிண்ட் ஆகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இந்த புள்ளி உள்ளது. இரண்டின் பாதிக்கப்படலாம் சூரியனை ஆய்வு செய்யும் பொருட்டு ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இரண்டின் ஈர்ப்பு விசை காரணமாக ஆதித்யா எல் 1 எளிதாக இங்கே வட்டப்பாதையில் சுற்ற முடியும்.

கிட்டத்தட்ட சூரியன் பூமிக்கு இடையிலான தூரம் 151 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். கிட்டத்தட்ட சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்படும். கிட்டத்தட்ட 4 மாதங்கள் பயணம் செய்து ஆதித்யா எல் 1 சூரியனின் இந்த எல் 1 பாயிண்டை சென்றடையும். நாசாவின் பார்க்கர் இதற்கு முன் சூரியனில் இருந்து 7.8 மில்லியன் கிலோ மீட்டர் அருகில் சென்றது. அதன்பின் தற்போது இஸ்ரோ சார்பாக ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. சூரிய மேல் வளிமண்டல (குரோமோஸ்பியர் மற்றும் கரோனா) இயக்கவியல் பற்றிய ஆய்வு. குரோமோஸ்பிரிக் மற்றும் கரோனல் வெப்பமாக்கல் பற்றிய ஆய்வு, அயனியாக்கம் செய்யப்பட்ட பிளாஸ்மாவின் இயற்பியல், கரோனல் எரிப்பு பற்றிய ஆய்வு உள்ளிட்ட ஆய்வுகளை ஆதித்யா எல் 1 மேற்கொள்ள உள்ளது.

சமீபத்தில்தான் இஸ்ரோ வெற்றிகரமாக சந்திரயான் திட்டத்தை நிறைவேற்றியது. சந்திரயான் 3 நிலவில் தீவிரமான ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்து வருகின்றன. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. பிரக்யான் ரோவர் நிலவில் மெதுவாக நகர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் தங்களுடன் கொண்டு சென்ற எல்லா கருவிகளையும் நிலவில் இறக்கி ஆய்வு செய்து வருகிறது,

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...