இன்ஸ்டாவில் “உயிர்” “ உலக்” உடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்! | தனுஜா ஜெயராமன்

 இன்ஸ்டாவில் “உயிர்” “ உலக்” உடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்! | தனுஜா ஜெயராமன்

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, இன்ஸ்டாகிராமில்  இணைந்திருக்கிறார். தனது மகன்களான உயிர் மற்றும் உலக் ஆகியோருடன் கூலிங்கிளாஸூடன் ஸ்டைலாக வருகிறார் நயன். தற்போது லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்ட நயன்தாரா பாலிவுட் கிங் ஷாருக்கான் ஜோடியாக “ஜவான் “படத்தில் நடித்து கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். நயன்தாரா  இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில் இருந்து அவருக்கு உலகம் முழுவதிலிருந்து ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்துஅவரது சமூக வலைத்தள பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர்.

முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடனுடன்  இணைந்து ப்ளாக்பஸ்டர் படம்  தந்த பெருமை கொண்ட நயன்தாரா, தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக புகழப்பட்டார். ரஜினிகாந்த்  உடன்  நடித்த “சந்திரமுகி”  படத்தின் வெற்றிக்குப் பிறகு,   அவர் தொடந்து நடித்த அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றன. முதன்மை பெண் கதாப்பாத்திரங்களை  மையமாக கொண்ட கதைகளில் அவர் நடித்த, மாயா, அறம், கோலமாவு கோகிலா படங்கள்  ப்ளாக்பஸ்டர்  படங்களாக வெற்றி பெற்றன. ரஜினிகாந்த், விஜய், அஜித், தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் நடிகர்களின் முதல் ஆதர்ச நாயகி  நயன்தாரா.  20 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய  திரையுலகின் முடிசூடா ராணியாக விளங்கி வருகிறார்நயன்தாரா.

தற்போது பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அட்லி இயக்கத்தில் பிரமாண்ட பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள ஜவான் வரும் செப்டம்பர் 7 ஆம்தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தற்போது தன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவர்களுடன் தொடர்ந்து உரையாடும் நோக்கில் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். உலகம் முழுக்க இருக்கும் நயனின்  ரசிகர்கள் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்துஅவரது சமூக வலைத்தள பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர்

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...