96 பட இயக்குநரின்வித்தியாசமான முயற்சி! வில்லன் இல்லாத ஹீரோ..!
நடிகர் கார்த்தி -ராஜூ முருகன் கூட்டணியில் உருவாகியுள்ள ஜப்பான் படம் வரும் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமியுடன் தன்னுடைய 26வது படத்திற்காக இணைந்துள்ளார் நடிகர் கார்த்தி. இந்தப் படங்களை தொடர்ந்து 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கார்த்தி. கோவுட்டில் நடிகர் கார்த்தி கியாரண்டி நடிகர் என்று பெயர் பெற்றவர். இவரது படங்கள் அனைத்தும் இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மினிமம் கியாரண்டி என்ற வகையில் வெற்றியை கொடுத்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் இவரது மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி சூப்பர் வெற்றியை கொடுத்துள்ளன. விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்த படங்கள் கார்த்தி நடிப்பில் வெளியாகின.
இந்தப் படங்களை தொடர்ந்து இந்த ஆண்டின் துவக்கத்திலேயே மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகி கார்த்திக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் வந்தியத் தேவன் கேரக்டரில் ரசிகர்களை கவர்ந்திருந்தார் கார்த்தி. இந்தப் படத்தையடுத்து தன்னுடைய கார்த்தி 25 படத்திற்காக இயக்குநர் ராஜூ முருகனுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஜப்பான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இந்தப் படம் வரும் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சாங் சூட்டிங்கிற்காக காஷ்மீரில் படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமியுடன் தன்னுடைய கார்த்தி 26 படத்திலும் கார்த்தி இணைந்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங்கும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் ராஜ்கிரண் கார்த்தியின் தாத்தாவாக நடித்து வருவதாகவும் அவர் படத்தில் எம்ஜிஆர் ரசிகராக வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக 96 பட இயக்குநர் பிரேம்குமாருடன் இணையவுள்ளார் கார்த்தி. இந்தப் படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு உருவாகவுள்ள நிலையில், இந்தப் படத்திலும் கார்த்தியுடன் ராஜ்கிரண் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் கார்த்தியின் பெரியப்பாவாக நடிக்கிறாராம் ராஜ்கிரண். படத்தில் அரவிந்த் சாமியும் உள்ள நிலையில், அவரது தாய்மாமனாக ராஜ்கிரண் நடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தஞ்சை மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இந்தப் படத்தில் இயக்குநர் விக்ரமன் பாணியில் வில்லனே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சூழ்நிலை தான் வில்லனாக மாறி ஆட்டம் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் 96 படத்தை காட்டிலும் இரண்டு மடங்கு சிறப்பாக கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.