சர்க்கரைநோய் உள்ளவர்கள் பனங்கிழங்கை சாப்பிடலாமா? | தனுஜா ஜெயராமன்

 சர்க்கரைநோய் உள்ளவர்கள் பனங்கிழங்கை சாப்பிடலாமா? | தனுஜா ஜெயராமன்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் பனங்கிழங்கை சாப்பிடலாம் என்கிறார்கள் நாட்டு வைத்தியர்கள். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். பொதுவாக சர்க்கரைநோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக்கூடிய பொருட்களை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. ஆனால் பனங்கிழங்கில் உள்ள வேதி பொருட்கள் நம் உடம்பில் இன்சுலினை சுரக்க வைத்து இரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.பனங்கிழங்கு சாப்பிடுவோர் பரம்பரைக்கே சர்க்கரை நோய் வராது என்பது பெரியோர்களின் கருத்து ஆகும்.

வயிறு மற்றும் சிறுநீரக பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங் கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...