பான் கார்ட் வங்கி கணக்குடன் இணைக்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

மத்திய நிதியமைச்சகம் பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு ஜூன் 30 2023 இல் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது. அப்படி செய்யவில்லையெனில் அது செயல் இழந்து விடும் என எச்சரித்தது. அதன் பிறகு பான் கார்டை பயன்படுத்த முடியாது, அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். பான் கார்டு செயல்படாவிட்டால் அதை மீண்டும் புதுப்பிக்க முடியும். அதற்கு  ஆதாரை பயன்படுத்தி ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். பான் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்திருந்தால் பான் கார்டு அடுத்த 30 நாட்களுக்கு செயல்படாது.

வருமான வரி விதிகளின்படி செயல்படாத பான் கார்டு என்பது பான் கார்டு இல்லாததற்கு சமம். வங்கி கணக்கை தொடங்குவதற்கு இந்த பான் கார்டை பயன்படுத்த முடியாது. பான் கார்டு செயல்படாத பட்சத்தில்  வங்கிக் கணக்கில் உங்களது சம்பளத்தை வரவு செய்ய முடியாது. நிறுவனம் சார்பில் சம்பளம் வங்கிக்கணக்கில் வரவு செய்யப்படும். அத்துடன் அதற்கான டிடிஎஸ் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். வங்கியிலிருந்து கணக்குக்கு பணத்தை மாற்றுவதற்கு காலதாமதம் ஆகும்.

பான் கார்டு செயல்படாவிட்டால் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப முடியாது. வெளிநாட்டு ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க முடியாது. வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்த முடியாது. அதேவேளையில் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு வாங்குவதற்கு  பான் கார்டு எண்ணை அளிக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பான் கார்டு செயல்படாமல் இருந்தால் சிக்கல் உண்டாகும். கேஒய்சிக்கு பான் கார்டு அவசியம். ஆதார் கார்டு அல்லது பிற வழிகளில் வங்கிகள் அதைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!