பாக்ஸ்ஆஃபிஸில் தொடர்ந்து முதல் இடத்தில் “பார்பி”
அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு போட்டியாக பெண் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் பார்பி திரைப்படம் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
இந்நிலையில் நான்காம் வார இறுதி நாளான நேற்று மட்டும் பார்பி திரைப்படம் 3.37 கோடி வசூலை பெற்றதாகவும், அதேபோல் உலகம் முழுவதும் இன்னும் 4137 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், கிரேட்டா கெர்விக், வில் ஃபெரெல், எம்மா மேக்கி, சிமு லியு, மைக்கேல் செரா, கேட் மெக்கின்னன் ஆகியோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் பார்பி.
பார்பி படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து வருவதாகவும் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பாக்ஸ்ஆஃபிஸில் பார்பி படம் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதாகவும், பார்பி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த பெண் இயக்குனர் என்ற பட்டத்தை இயக்குனர் கிரேட்டா கெர்விக் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.