வசூலில் கலக்கி வரும் ‘ஓபன்ஹெய்மர்’ !

 வசூலில் கலக்கி வரும் ‘ஓபன்ஹெய்மர்’ !

ஹாலிவுட் திரையுலகில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் உருவான ‘ஓபன்ஹெய்மர்’ படம் கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், சிலியன் மர்பி, மேட் டேமன் என பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கிய இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

“அணுகுண்டின் தந்தை’ என்று அழைக்கப்படும் ராபர்ட் ஜெ.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓப்பன்ஹெய்மர்’.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிலியன் மர்பி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

ஓபன்ஹெய்மர் படத்துக்கு முதல் நாளில் இருந்தே உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் முதல்நாளிலேயே 90 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...