கூகுள்-க்கே சவால் விடும் இந்திய நிறுவனம்..!

 கூகுள்-க்கே சவால் விடும் இந்திய நிறுவனம்..!

கூகுள் மேப்ஸ்-இன் போட்டிக் கம்பெனியான மேப்மைஇந்தியா கடந்த நிதியாண்டில் ரூ.282 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இதில் வட்டி போக ரூ.108 கோடியை லாபமாக அடைந்துள்ளது. 28 ஆண்டுகளான இந்திய நிறுவனம் மேப்மைஇந்தியா மெக்டோனல்டு, ஆப்பிள், அமேசான் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான மேப்பிங் சர்வீஸில் இறங்கியுள்ளது. இதன் கன்ஸ்யூமர் ஆப்பான Mappls-க்கு 3 மில்லியன் டவுண்லோடு ஆண்டிராய்டு, ஐஓஎஸ் மற்றும் ஏபிஐ பிளாட்பார்மில் கிடைத்துள்ளது. இதை வைத்து போன்பே, பேடிஎம், கோவின் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேப்மைஇந்தியா நிறுவனம் 300 மில்லியன் மொபைல் போன்களில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செய்து வந்த அதிக சம்பளம் கொண்ட வேலையை உதறிவிட்டு ராகேஷ், ராஷ்மி வர்மா ஆகியோர் தங்கள் தாய் நாடான இந்தியாவுக்குத் திரும்பினர். இங்கு வந்தவுடன் ஜியோகிராபிகல் மேப் பிரிட்டிஷ் காலத்துக்குப்பின் அப்டேட் செய்யப்படவில்லை என்பதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து இதற்கு நல்ல பிரகாசமான எதிர்காலம் இருப்பதை அறிந்து இந்திய அரசாங்கத்தை டேட்டாவுக்காக தொடர்பு கொண்டனர். அவர்கள் அணுகியபோது முதலில் எதுவும் சாதகமாகவில்லை. பின்னர் அரசு அதிகாரிகளின் முடிவுகளால் தாங்கள் நினைத்ததை சாதிக்க முடிந்தது. இந்நிலையில் நாட்டுக்காக எதையாவது சாதித்து தரவேண்டும் என்று நினைத்த அந்த இருவரும் இந்தியாவின் முதல் தரம் வாய்ந்த டிஜிட்டல் மேப் டேட்டாபேஸை உருவாக்க முடிவு செய்தனர். இது நாட்டின் சொத்தாகும். இந்திய மிகப் பெரிய நாடு என்பதால் இந்தக் காரியமும் சிக்கல் வாயந்ததாகும்.

இதனால் பிராக்டிக்கலாக ஒத்துவரும் நடைமுறைகளை மேற்கொள்வது என்று அவர்கள் திட்டமிட்டனர். டாப் டவுண் மற்றும் பாட்டம்ஸ் அப். டாப் டவுண் என்றால் கிடைக்கும் பேப்பர் மேப்களை அவர்கள் டிஜிட்டலைஸ் செய்தனர். இதன் மூலம் அவர்களால் டேட்டாக்களை புரிந்து கொள்ள முடிந்தது. பாட்டம்ஸ் அப் என்றால் உண்மையிலேயே வெளியில் சென்று நாட்டின் பல்வேறு பகுதிகளை மேப்பிங் செய்வதாகும். ராகேஷும் ராஷ்மியும் சேர்ந்து ஒரு குழுவாகச் செயல்பட்டனர். நாட்டின் சிறிய தெருக்களைக்கூட விடாமல் சர்வே செய்தனர். 25 ஆண்டுகள் ஆய்வு, 400 சர்வேயர்களை வைத்து செய்த வேலையில் 2 கோடி டேட்டா பாயிண்டுகளை கைவசம் வைத்துள்ளனர். இதில் 3டி டேட்டா விஷுவலைசேஷன்ஸ், டெலிமேடிக்ஸ், நேவிகேஷன் சிஸ்டம் அடங்கும். இது கஸ்டமர்கள் முதலீடு செய்த இந்திய பிசினஸ் மாடலாகும். அவர்களது பயணத்தில் கோகோ கோலா கூட்டு சேர்ந்தது.

பின்னர் மாரிக்கோ, ஹிந்துஸ்தான் லீவர், இந்திய ராணுவ சேவைகள் இவர்களது வாடிக்கையாளர்கள் ஆனார்கள். 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே மேப்மைஇந்தியாவுக்கு 500க்கும் மேற்பட்ட தொழில்வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். 400க்கும் மேற்பட்ட சர்வேயர்களைக் கொண்டு மேப்மைஇந்தியா சிறப்பான பணியை செய்தது. கடந்த 25 ஆண்டுகளில் ஒரு பகுதியைப் பற்றி பலதரப்பட்ட தரவுகளை சேகரித்தது. கட்டட வரைபடம், படிக்கட்டுகள், கட்டட அடுக்குத் தளம், பிளாட் நம்பர், போட்டோகிராப்கள், கட்டடத்தின் வகைகள் இதில் அடங்கும்.

இதை வைத்து கம்பெனி தனது டேட்டா பலத்தை அதிகரித்தது. அத்துடன் 100க்கும் மேற்பட்ட கம்பெனிகளுடன் கூட்டு சேர்ந்தது. மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மூலம் டேட்டாக்களை விரைவில் பெறுவதற்கும் வகை செய்யப்பட்டது. மேப்மைஇந்தியா நம் நாட்டின் முதல் இன்டராக்டிவ் மேப்பிங் பேட்ரோலோக மாறியது. 1998இல் சாட்டிலைட் படங்கள் இந்தியாவில் கிடைக்கத் தொடங்கின. இது கம்பெனியின் உற்பத்தித்திறனை அதிகரித்தது. டேட்டாக்களை சேகரிப்பது மிகவும் சுலபமானது. இதன்மூலம் பல செயல்களை சாதிக்க முடிந்தது. இந்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டில் மேப்மைஇந்தியாவின் முதல் இன்டராக்டிவ் மேப்பிங் போர்டல் அதன் வெப்சைட்டில் அப்லோடு செய்யப்பட்டது. சில மாதங்கலிலேயே தினமும் 5-6 ஆயிரம் யுனிக் விசிட்டர்கள் கிடைத்தனர். இந்த ஆண்டில்தான் இருவருக்கும் ரோஹன் வர்மா என்ற மகன் பிறந்தார். ஸ்டான்போர்டு இஞ்சினியரிங் பட்டதாரியாகி தற்போது மேப்மைஇந்தியா நிறுவனத்தின் சிடிஓவாக உள்ளார். அவர் இந்த மேப்களை யார் வேண்டுமானாலும் இலவசமாக பார்ப்பதற்கான போர்டலை உருவாக்கினார். 3 ஆண்டுகள் கழித்து நிறுவனம் பான் இந்தியா ஜிபிஎஸ் நேவிகேஷன் கருவியை 2007இல் அறிமுகப்படுத்தியது. இது போர்டலில் இருந்து வித்தியாசமானது.

இப்போது வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களில் ஒரு கருவியைப் பொருத்தி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியும். ரியல் டைமில் ஒவ்வொரு வளைவுக்கும் உதவி கிடைக்கும். இதன்மூலம் கம்பெனிக்கு நிறைய ஆட்டமோட்டிவ் மார்க்கெட் கூட்டு கிடைத்தது. கார் நிறுவனங்கள் கம்பெனியின் ஜிபிஎஸ் கருவியை ஒரு ஆக்ஸசரியாக அளித்தனர். பின்னர் டச்ஸ்கிரீன் நேவிகேஷனை வாகனத்தில் நிறுவினர். போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், மகிந்திரா, பிஎம்டபிள்யூ போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த டச் ஸ்கிரீன் நேவிகேஷன் சிஸ்டம் கருவியை தங்களது கார்களில் அறிமுகப்படுத்தின. எவ்வளவு என்று விவரம் சொல்லப்படாத கட்டணத்துடன் மேப்மைஇந்தியா நேவிகேஷன் கருவியை நிறுவனங்கள் வாங்கின. பின்னர் மேஜிக்பிரிக்ஸ், மேக்மைடிரிப், ஹூண்டாய், ஹோண்டாவும் மேப்மைஇந்தியா நேவிகேஷன் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தினர். கடந்த 2006இல் இந்தியாவில் கூகுள் மிகவும் பிரபலமானது. இதனால் மேப்மைஇந்தியாவை நேருக்கு நேர் மேப்பிங் களத்தில் உலக ஜாம்பவனான கூகுள் சந்திக்க வேண்டியிருந்தது.

கூகுள் மேப்ஸ் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது டேட்டாக்களை விஷுவலைஸ் செய்ய முடியும். அதேநேரத்தில் மேப்மைஇந்தியா யூசர்களை ஜியோ-டெமோகிராபிக் டேட்டாக்களை அனலைஸ் செய்ய அனுமதித்தது. எடுத்துக்காட்டாக, யாராவது ஒருவர் ஒரு பகுதியில் ஹோட்டல் ஆரம்பிக்க நினைத்தால் மேப்மைஇந்தியா அந்தப் பகுதியின் மக்கள்தொகை விவரம், ஹோட்டலைப் பயன்படுத்தக்கூடிய மக்கள் எண்ணிக்கை விவரம் போன்ற தகவல்களைத் தந்தது. அத்துடன் சாலைகளை 3டி வடிவில் காண்தல், பார்க்கிங் இடம் போன்ற விவரங்களையும் அளித்தது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...