பூத்திருக்கும் விழியெடுத்து – 3 | முகில் தினகரன்

 பூத்திருக்கும் விழியெடுத்து – 3 | முகில் தினகரன்

அத்தியாயம் 3

மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டி ஒரு விபத்து ஏற்படும் காட்சியையும், ஆன் லைன் ரம்மி விளையாடி ஏகமாய் இழந்து தற்கொலை செய்யும் ஒரு இளைஞனின் கதையையும், போதைக்கு அடிமையாகும் ஒருவன் படும் துயரங்களையும், வெறும் முகபாவம் மற்றும் நடன அசைவுகள் மூலமாய் வெளிப்படுத்தும் விதமாக ஒரு புதுமையான நடன ஸ்கிரிப்டை தயார் செய்திருந்தாள் வைசாலிஅதை இறுதிப் போட்டிக்கென்று முடிவு செய்து விட்டு, மற்ற பயிற்சி ஆட்டங்களுக்கு வேறு சாதாரண நடனங்களைக் குறித்து வைத்தாள்.

ஆர்ப்பாட்ட இசையைத் தவிர்த்து, வெறும் ஒற்றைப் புல்லாங்குழல் இசை மூலமாக, காட்சியின் தன்மையை உணர்த்தும் வித்தையையும் செய்திருந்தாள்.

அவள் கொடுத்து வந்த தொடர் பயிற்சி பத்து பேர் கொண்ட அவள் டீமை செம்மையாய் மெருகேற்றியிருந்தது.

மாநில அளவிலான அந்த நடனப் போட்டிக்கான நாள் நெருங்க நெருங்க, பயிற்சியின் தீவிரம் உச்ச நிலைக்குப் போய்க் கொண்டேயிருந்தது. நம்பிக்கையோடு அவள் கொடுத்த பயிற்சி அந்த மாணவ மணிகள் மனத்தில் வெற்றியை உறுதிப்படுத்தியிருந்தது.

கேம்ஸ் ஹாலில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வைசாலிக்கு பிரின்ஸிபால் மேடத்திடமிருந்து அழைப்பு வர, “.கேஇன்னிக்கு பிராக்டீஸ் போதும்இனி நாளை மதியத்துக்கு மேல் இங்கே வந்தால் போதும்என்று சொல்லி ஸ்டூடண்ட்ஸ்களை அனுப்பி விட்டு, பிரின்ஸிபால் அறையை நோக்கி நடந்தாள்.

 “என்ன வைசாலிஎப்படிப் போயிட்டிருக்கு டான்ஸ் பிராக்டீஸ்?” பிரின்ஸிபால் மேடம் கேட்க,

 “ரொம்ப நல்லா போயிட்டிருக்கு மேடம்கன்ஃபர்மாஇந்த தடவை நம்ம காலேஜ் டீம்தான் டைட்டில் வின்னர்ஸ்.. அதுல துளிக்கூட சந்தேகமேயில்லை மேடம்நம்பிக்கையோடு சொன்னாள் வைசாலி.

 “அதை நீங்க சொல்லவே வேண்டியதில்லை வைசாலி மேடம்எனக்கு என் ஸ்டூடண்ட்ஸ் மேலே இருக்கற நம்பிக்கையை விட அதிகமா உங்க பிராக்டீஸ் மேலேதான் இருக்கு!”

இல்லை மேடம்ஸ்டூடண்ட்ஸோட ஒத்துழைப்பு இல்லேன்னாஎன்னோட பிராக்டீஸெல்லாம் பூஜ்யம்தான் மேடம்மாணவச் சமுதாயத்தை விட்டுக் கொடுக்காமல் பேசினாள் வைசாலி.

 “வெரி குட்என்ற பிரின்ஸிபால் மேடம், “ம்ம்ம்நானும் சில சீனியர் புரபஸர்ஸும்அந்த டான்ஸ் பர்ஃபாமென்ஸை ஒரு தரம் பார்க்கணும்னு நினைக்கறோம்.. எப்ப பார்க்கலாம்?” பிரின்ஸிபால் கேட்க,

 “இன்னிக்கே பார்க்கலாம் மேடம்அந்த அளவுக்கு தயாராயிட்டாங்க மேடம்

 “.கே….அப்ப ஈவினிங் ஃபோர் தர்ட்டிக்கு கேம்ஸ் ஹால்ல வெச்சு பார்த்திடலாம்என்ன சொல்றீங்க?”

 “வித் ப்ளஷர் மேடம்

 அன்று மாலை கேம்ஸ் ஹாலில் வைசாலி ஸ்கிரிப்ட் எழுதி தயாரித்திருந்த அந்த குழு நடனத்தைப் பார்த்து அசந்து போய் விட்டனர் பிரின்ஸிபால் மேடமும், மற்ற சீனியர் புரபஸர்களும்.

வைசாலிமுதல்ல கையைக் குடும்மாஇந்த நாட்டிய நிகழ்ச்சிக்கு பரிசு கிடைக்கலேன்னாஅந்த போட்டியின் நடுவர்கள் கிட்டேதான் தப்பிருக்கு!ன்னு அர்த்தம்…” புள்ளியியல் துறை பேராசிரியர் சொல்ல,

அதை ஆமோதிப்பது போல் புன்னகைத்த பிரின்ஸிபால் மேடம், “வைசாலி மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கையின் அளவு இந்த நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு இன்னும் அதிகமாயிருக்கு!… யூ டன் எ குட் ஜாப்என்றார்.

வைசாலி உட்பட அந்த மாணவக் கும்பல் மொத்தமும் நம்பிக்கை ஊஞ்சலில் உற்சாகமாய் ஆடிக் கொண்டிருந்த நேரத்தில், “நீங்க எல்லோரும் தான் இந்த நடனத்தை ஆஹாஓஹோன்னு புகழறீங்கஎனக்கென்னவோஇது சாதாரணமாய்த்தான் தெரியுதுஎன்றாள் சீனியர் லைப்ரரியன் சித்ரா.

எல்லோரும் முகத்தைச் சுளித்துக் கொண்டு அவளைப் பார்க்க,  “அதாவது நடன நிகழ்ச்சி என்கிற போதுஜட்ஜஸ் அனைவரும்நடன அசைவுகளையும்நடனமாடுவோரின் எனர்ஜியையும்இசையோடு இணைந்து பயணிக்கும் மூவ்மெண்ட்ஸ்களையும்தான் உன்னிப்பாக கவனிப்பார்கள்… “ஆஹாநல்ல கான்ஸெப்ட் இருக்குநல்ல மெசேஜ் இருக்குஇது ஸ்டூடண்ட்ஸுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்…” என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள்…! ஏன்னாஇது டான்ஸ் போட்டிடிராமா போட்டியல்ல!” தெளிவாகச் சொன்னாள்.

வைசாலியின் முகம் சுருங்கிப் போனாது, அதைக் கவனித்து விட்ட பிரின்ஸிபால், “இல்லை சித்ரா மேடம்டான்ஸ் புரோக்ராமிலும் மெஸேஜை கவனிப்பாங்க!..” என்றாள்.

பேசி முடித்து எல்லோரும் கலைந்து போனதும், மாணவனொருவன் கேட்டான், “என்ன மேடம்லைப்ரரியன் மேடம் வேற மாதிரி சொல்றாங்கஎன்றான்சொல்லும் போது அவன் முகத்தில் கிலோ கணக்கில் அவநம்பிக்கை.

அந்த அவநம்பிக்கையை முளையிலேயே கிள்ளிப் போடாவிட்டால், அது ஆலமரமாய் வளர்ந்து மற்றவர்களையும் சோர்வடையச் செய்து விடும், என்பதை புரிந்து கொண்ட வைசாலி, “ஸ்டூடண்ட்ஸ்.. நீங்க அந்த சித்ரா சொன்னதையெல்லாம் உண்மைன்னு நெனச்சிட்டீங்களா?.. ஆக்சுவலா அவங்களுக்கு என் மேல் பொறாமை!… எங்கே நான் மாநிலங்களுக்கிடையே நடைபெறும் இந்தப் போட்டியில் கோப்பையைத் தட்டிக் கொண்டு வந்து நல்ல பேர் வாங்கி விடுவேனோ?”ங்கற பொறாமை!.. அதான் அப்படி நெகடிவா பேசறாங்க…” என்றாள்.

 “ம்ம்ம்நீங்க சொல்றது உண்மைன்னே வெச்சுக்கலாம்!… ஒருவேளை அங்கே ரிசல்ட் போடும் ஜட்ஜஸ்.. டான்ஸுக்கு மட்டுமே முக்கியத்துவம் குடுத்து கான்ஸெப்டைக் கவனிக்கலேன்னா…” ஒரு மாணவி கேட்க,

 “நாம தோத்துடுவோம்என்றாள் இன்னொரு மாணவி.

நோநாம தோற்க மாட்டோம்!… தோற்க கூடாது!… இந்த வைசாலி வாழ்க்கைல தோல்விங்கற வார்த்தைக்கே இடமில்லை!… “ ஆவேசமாய்க் கத்தியே விட்டாள் வைசாலி.

அரண்டு போய் விட்டனர் மாணவர்கள்.  “என்ன மேடம்ஏன் இப்படி எமோஷன் ஆகறீங்க?” சன்னக் குரலில் கேட்டாள் ஒரு மாணவி.

 “ஸாரிஸாரிஸ்டூடண்ட்ஸ்நான் கொஞ்சம் உனர்ச்சிவசப்பட்டுட்டேன்…” என்று முகத்தைக் கைகளால் துடைத்துக் கொண்டே சொன்னவள், “தோல்வியின் அடையாளம் தயக்கம், வெற்றியின் அடையாளம் துணிச்சல்துணிந்தவர் தோற்றதில்லைதயங்கியவர் வென்றதில்லை!… ஸோநீ தயக்கமே கொஞ்சமும் இல்லாமல் பிராக்டீஸ் பண்ணுங்கஜெயிப்போம்என்றாள்.

அதற்கு மேலும் அங்கு நின்று பேசினால் வைசாலி மேடம் இன்னும் அதிகமா எமோஷன் ஆகி விடுவார்கள், என்பதை உணர்ந்து அந்த மாணவக் கூட்டம் அங்கிருந்து நகர்ந்தது.

****

“என்ன வைசாலி ஏன் உன் முகம் “கடு..கடு”ன்னு இருக்கு?”

  இந்த தடவை ஆனிவல் டே டான்ஸ் போட்டில உங்க கிளாஸ்ல யார் கலந்துக்கப் போறாங்க?”

  “இதென்ன கேள்வி?… வழக்கம் போல நான்தான்”

  “நோ… இந்த வருஷம் நீ கலந்துக்க கூடாது… உனக்கு பதிலா உங்க வகுப்புல வேற யாரையாவது ஆடச் சொல்லு”

 ”ஏன் வைசாலி… ஏன் அப்படிச் சொல்றே?”

 “ஏன்னா… இந்த வருஷம் என் வகுப்பிலிருந்து நான்தான் ஆடப் போறேன்”

 “வெரி குட் வைசாலி… ‘உங்க கிளாஸிலிருந்து நீ…எங்க கிளாஸிலிருந்து நான்’.. சூப்பர்…சூப்பர்…அமர்க்களமாயிருக்கும்”

“இல்லை அசோக்… நாம ரெண்டு பேரும் லவ்வர்ஸ்…. நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் போட்டி இருக்க கூடாது!…”

  “ஏன் வைசாலி?… இருந்தா என்ன?”

  “நான் விசாரிச்ச வரையில்.. இந்த தடவை நீதான் ஜெயிக்கப் போறே!ன்னு எல்லோருமே சொல்லிட்டிருக்காங்க!… அது மட்டுமில்லை… ஃபைனல்ஸ்ல நீயும்… நானும் தான் நேருக்கு நேர் மோதப் போறோம்!ன்னும் பேசிக்கறாங்க””

  “ஓ….”

  “அசோக்… உனக்கே தெரியும்… நான் எதை வேணாலும் தாங்கிக்குவேன்… ஆனா “தோல்வி”யை மட்டும் தாங்க மாட்டேன்!னு”

  “தெரியும்… தெரியும்… முந்தா நாளு உன் ஸ்கூட்டியை முந்திக்கிட்டுப் போன ஒரு லேடி ஸ்டூடண்டைத் துரத்திட்டுப் போய் எட்டி உதைச்சுக் கீழே தள்ளி விட்டுட்டு நீ முந்திட்டுப் போனதா எனக்கு தகவல் வந்திச்சு”

  “தெரியுதல்ல?… அதனாலதான் சொல்றேன்… நீ போட்டியிலிருந்து வாபஸ் வாங்கிக்கோ…”

  “வாங்கலேன்னா…?”

“நான் காலேஜை விட்டே நின்னுடுவேன்!… இந்த ஜென்மத்துல உன் மூஞ்சில முழிக்க மாட்டேன்”

  “ஹேய்… நாம ரெண்டு பேரும் லவ்வர்ஸ்டி… இந்த டான்ஸ் பிரச்சினைக்காக நம்ம காதலையே காவு குடுப்பியா நீ?”

  “ஹும்… தோல்வியைத் தவிர்க்கணும்ன்னா… நான் உன்னையே கூட காவு குடுப்பேன் அசோக்”

****

  “ச்சை…. இந்த சனியன் பிடிச்ச நினைவுகள் என்னிக்குத்தான்  என் நெஞ்சுக்குள்ளிருந்து மறையுமோ தெரியலைஎன்று சலித்துக் கொண்டே கேம்ஸ் ஹாலை விட்டு வெளியேறினாள் வைசாலி

-( மலரும்… )

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...