மோடி 3வது முறை பிரதமராக வேண்டும்- சந்திரபாபு நாயுடு..!

 மோடி 3வது முறை பிரதமராக வேண்டும்- சந்திரபாபு நாயுடு..!

இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதலாபட்டில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளறியிள்ளது.

மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மூன்றாவது வாய்ப்பை வழங்க வேண்டும் என்கிறார் சந்திரபாபு நாயுடு.

அந்த பொது கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு மேலும் பேசியதாவது….”ஆந்திராவில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் . தெலுங்கு மக்களுக்கு மூலதனம் இல்லாததால் வெட்கப்படுகிறேன்.

ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியையும் மாநிலத்தையும் , பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்து நாசமாக்கிவிட்டார். ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்களின் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன என்பதை உணர்ந்துள்ளனர்.

நேற்று புங்கனூரில் கலவரம் ஏற்படுத்திவிட்டனர். சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர ரெட்டியின் கைக்கூலியாகிவிட்டார். இவ்வாறு அவர் பேசினார். ஆந்திர மாநிலத்தில் பா.ஜனதாவுடன் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மட்டுமே கூட்டணியில் உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

டெல்லியில் நடந்த பா.ஜனதா கூட்டணிகள் கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என பேசி உள்ளார்.

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆந்திர முதல்அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு அளிக்கவில்லை. அவரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிட தக்கது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...