பூத்திருக்கும் விழியெடுத்து – 2 | முகில் தினகரன்

 பூத்திருக்கும் விழியெடுத்து – 2 | முகில் தினகரன்

                                        

அத்தியாயம் 2

            மதர்ஸ் இண்டியா ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி. கோயமுத்தூரின் மேற்குப் பகுதியில் அழகிய மலையடிவாரத்தில், அற்புதமான இயற்கைச் சூழலில் அமைந்திருந்தது.

நோட்டீஸ் போர்டில் புதிதாய் இடம் பிடித்திருந்த அந்த நோட்டீஸை மாணவக் கும்பல் ஈ மொய்ப்பது போல் மொய்த்துக் கொண்டிருந்ததுபல பெண் ஈக்களும் அந்தக் கும்பலில் இடப் பிடித்திருந்தன.

      “என்னப்பாஅப்படி என்ன அந்த நோட்டீஸ் போர்டுல இன்னிக்கு வெச்சிருக்கு?” காமர்ஸ் புரபஸர் ஆல்பர்ட் உடன் வந்த மாணவனிடம் கேட்க,

      “அதுவா சார்?… அடுத்த மாசம் எங்கியோ இண்டர் ஸ்டேட் டான்ஸ் காம்படிஸன் நடக்குதாம்அதுல கலந்துக்க விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பெயரை இங்கிலீஷ் புரபஸர் அசோக் சார் கிட்டே ரெஜிஸ்டர் பண்ணிக்கச் சொல்லி நோட்டீஸ் போட்டிருக்கு சார்

      “அடச்சைஅதை எதுக்குப்பா இப்படி முட்டி மோதிப் படிக்கறானுக?” காமர்ஸ் புரபஸர் அங்கலாய்ப்பாய்க் கேட்டார்.

     என்ன சார் இப்படிச் சொல்லிட்டீங்க?… நம்ம இங்கிலீஷ் புரபஸர் அசோக் சாரை சாதாரணமா எடை போட்டுடாதீங்கஅவர் டிரெய்னிங் குடுத்து ஸ்டூடண்ட்ஸைக் கூட்டிட்டுப் போய் காம்படிஸன்ல கலந்துக்கிட்டார்ன்னாநிச்சயம் அவங்க பரிசுக் கோப்பையோட தான் திரும்பி வருவாங்க!… அதை விட முக்கியம் என்னன்னா?… அவர் கிட்ட டிரெய்னிங் எடுத்து டான்ஸ் போட்டில கலந்து பரிசு வாங்கின மூணு ஸ்டூடண்ட்ஸ்களுக்கு சினிமாவுல சான்ஸ் கிடைச்சு.. பெரிய டான்ஸ் மாஸ்டர்கள் ஆயிட்டாங்கன்னா பார்த்துக்கங்களேன்

      “சினிமாவுல போய் ஒட்டிக்கறது பெரிய சாதனையா?… அடப் போங்கடா.. போங்கடா!…” காமர்ஸ் புரபஸர் ஆல்பர்ட்டின் பேச்சில் பொறாமை தொணித்தது.

     அதே நேரம், இங்கிலிஷ் டிபார்ட்மெண்டில் மாணவ, மாணவியர்கள் குவியத் துவங்கினர்புரபஸர் அசோக் மேஜைக்கு எதிரே வரிசை கட்டி நின்றனர் அவர்கள். ஒவ்வொருவர் பெயரையும், வகுப்பையும் குறித்துக் கொண்டிருந்த புரபஸர் அசோக்,

மை டியர் ஸ்டூடண்ட்ஸ்பெயர் குடுத்தா மட்டும் பத்தாதுநாளை மறுநாள் இங்க நம்ம ஆடிட்டோரியத்துல நடக்கற முதல் செலக்‌ஷன் டான்ஸ்ல ஜெயிக்கணும்!… அதுக்கப்புறம் இரண்டாவதுமூன்றாவதுன்னு மூணு ஸ்டேஜ் இருக்குதுப்பாமூணாவது ஸ்டேஜ்ங்கறது சாதாரணமாய் இருக்காதுரொம்ப கடினமாய் இருக்கும்ஏன்னா அது செலக்ட் ஆகப் போற பத்து பேர்தான் அந்த இண்டர் ஸ்டேட் காம்படிஸன்ல கலந்துக்கப் போறவங்க

 “.கேசார்

    அவர்கள் அனைவரும் சென்ற பின், பெயர் கொடுத்தவர்களின் எண்ணிக்கையை சோதித்துப் பார்த்த அசோக், “பரவாயில்லையேமுப்பது பேர் இன்ஸ்ட்ரஸ்டா இருக்காங்களே!…”

     அடுத்த சில நிமிடங்களில் பிரின்ஸிபால் அறையை நோக்கிச் சென்ற ஆங்கில புரபஸர் அசோக், திரும்பி வருகையில் புன்னகை முகத்தோடு வந்தான்.

      “என்ன சார்.. முகத்துல சந்தோஷ ரேகைகள் தாறுமாறா ஓடுதேஎன்ன விசேஷம்பிரின்ஸ் மேடம் உங்களுக்கு மட்டும் தனியா ஊதிய உயர்வு கொடுத்துட்டாங்களா?” கல்லூரி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணி புரியும் வித்யாசாகர் கேட்க,

     ’கல..கலவெனச் சிரித்த அசோக், தன் சந்தோஷத்திற்கான உண்மையான காரணத்தை சொன்னான்.

      “அடச்சேஇதுக்குத்தானா இத்தனை சந்தோஷம்?” நக்கலாய்ச் சொல்லி விட்டு நகர்ந்தார் வித்யாசாகர்.

     அசோக் என்கிற பெருந்தீனிக்காரா… நீ மூளையை வளர்க்கிறாயோ இல்லையோ.. தொப்பையை நல்லா வளர்த்து வெச்சிருக்கே…. எனக்கென்னமோ நீ செலக்‌ஷன்லியே கோட்டை விட்டுடுவியோ…ன்னு தோணுது”

      “ஹி…ஹி… அது வேற ஒண்ணுமில்லை வைசாலி… ஒரு பதினஞ்சு நாளா எக்ஸர்சைஸ் பண்ணலே… அதான் கொஞ்சமா வயிறு வந்திட்டுது!…ஹி…ஹி…செலக்‌ஷன் நடக்கற நாள் வர்றதுக்குள்ளே இதைக் கரைச்சிடுவேன்”

        “ஹலோ… ரொம்ப அசடு வழியாதே… இந்த தொப்பைக்கு காரணம் எக்ஸர்சைஸ் பண்ணாதது மட்டுமில்லை… வாயை அடக்காம தீனியை உள்ளார போட்டுப் போட்டு வயித்தை ரொப்பியதுதான்”

        “ஓ.கே…பதினஞ்சு நாளைக்கு வைசாலியைக் கட்டிக்கறேன்… ஸாரி…ஸாரி… வாயைக் கட்டிக்கறேன்… ஹி…ஹி….டங்க் ஸ்லிப் ஆயிட்டுது…”

      பல வருடங்களுக்கு முன்னால் தனக்கும் தன் காதலி வைசாலிக்கும் இடையில் நடந்த அந்த உற்சாக சம்பாஷனை நினைவுகளை, கண்களை இறுக மூடி அழித்தான்.  “ச்சைஎத்தனை வருஷமாச்சுஇன்னும் இந்த நினைப்பு மட்டும் போகவே மாட்டேங்குது…” தனக்குள் சொல்லிக் கொண்டு இங்கிலீஸ் டிபார்ட்மெண்ட் கதவிற்குள் நுழைந்தான் அசோக்.

     அங்கு ஏற்கனவே வந்தமர்ந்து அவனுக்காக காத்திருந்த சயின்ஸ் டிபார்ட்மெண்ட் லெக்சரர் ரூபா, “என்ன சார் ஸ்டூடண்ட்ஸ் சொன்னாங்க இண்டர் ஸ்டேட் டான்ஸ் காம்படிஸனாமே?” கேட்டாள்.

      “அதான் பசங்க சொல்லிட்டானுகல்ல?… அப்புறம் அதை ஏன் என்கிட்ட வந்து கேட்கறீங்க மேடம்?”

 “கன்ஃபர்ம் பண்ணிக்கத்தான்

 “அதைக் கன்ஃபர்ம் பண்ணி நீங்க என்ன பண்ணப் போறீங்க மேடம்?”

 “ப்ச்சும்மா மேடம்மேடம்ன்னு கூப்பிட்டு என்னைக் கடுப்பேத்தாதீங்க அசோக் சார்சும்மா ரூபான்னு பேர் சொல்லியே கூப்பிடுங்க

 “ஸாரிநீங்களும் என்னைப் போல் ஒரு புரபஸர்ஸோ உங்களுக்கு மரியாதை குடுப்பது என் டியூட்டி

 “அது செரிநாளைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு.. மனைவியையும் மேடம்மேடம்ன்னுதான் கூப்பிடுவீங்களா?”

கல்யாணமாஎனக்காமேடம் ஐ யாம் அல்ரெடி ஃபார்ட்டி ஒன்நாப்பத்தியொண்ணுஇதுக்கு மேலே.. கல்யாணத்தைப் பத்தி கனவுல கூட நினைக்க முடியாதுஅசோக்கின் இந்தப் பேச்சில் கொஞ்சமாய் கோபமும் நிறைய விரக்தியும் தென்பட்டது.

 “என்ன சார் அப்படிச் சொல்லிட்டீங்கஉங்களைப் பார்த்தா நாப்பத்தியொண்ணு மாதிரியா தெரியுது?… முப்பதுக்கு மேலே சொல்ல முடியாது!… இப்ப நீங்க ம்ன்னு சொன்னாப் போதும்இளம் வயசுப் பொண்ணுங்க க்யூவுல வந்து நிப்பாங்க!… அந்தக் க்யூல நானும் முதல் ஆளா நிப்பேன்

அசோக் மீது தனக்குள்ள காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் சென்ற நிமிடம் வரை தவித்துக் கொண்டிருந்தவள் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் சொல்லியே விட்டாள்.

 அவள் உள்மன எண்ணம் புரிந்தும் புரியாதவன் போல், “இப்பத்தான் பிரின்ஸிபால் மேடம் உங்க டிபார்ட்மெண்ட் பக்கம் போனாங்கஎதுக்கும் நீங்க உடனே போய் உங்க டிபார்ட்மெண்ட்ல உங்க சீட்ல உட்கார்ந்திடுங்கஇல்லைபிரச்சினையாயிடும்என்றான் அசோக்.

 “ஓ மை காட்என்று சொல்லியபடியே அவசரமாய் எழுந்து ஓடினாள் லெக்சரர் ரூபா.

 “ஹும்பாவம் இந்தப் பொண்ணு.. என்னோட மனசுல இன்னொருத்தி பல வருஷமா கான்கிரீட்ல சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திட்டிருக்கற விஷயம் தெரியாம வீணா என் மேல் காதலை வளர்த்துக்கிட்டிருக்கா!…ப்ச்…” போகும் அவளையே பரிதாபமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தான் அசோக்.

-( மலரும்… )

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...