சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்
கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’.. இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஓய்வுக்காக மாலத்தீவு சென்றிருந்த நடிகர் ரஜினி நேற்று ஜூலை 26-ம் தேதி இரவு சென்னை வந்தடைந்தார். இன்று நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொள்கிறார்.
அவரைத் தவிர்த்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராஃப், சுனில் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.
மேலும், இதில் அனிருத்தின் லைவ் பர்ஃபாமென்ஸும், தமன்னாவின் நடனமும் இடம்பெறும் எனத் தெரிகிறது. தொடர்ந்து 7 மணிக்கு படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்த்து. இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.