அமெரிக்க கடற்படைக்கு முதல் பெண் தளபதி
அமெரிக்கா கடற்படையை வழிநடத்தும் முதல் பெண்மணியாக அட்மிரல் லிசா ஃபிரான்செட்டியை ஜோ பைடன் பரிந்துரைத்தார். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும்.
பென்டகன் அதிகாரிகள், பசிபிக் பகுதியில் கடற்படைக்குத் தலைமை தாங்கும் அட்மிரல் சாமுவேல் பாப்பரோவுக்குப் பரிந்துரைக்கப்படும் என்றும், சீனாவை எதிர்கொள்வதில் அனுபவம் உள்ளவர் லிசா என்றும் பரவலாக எதிர்பார்த்தனர்.
அமெரிக்க கடற்படையின் தளபதியாக உள்ள அட்மிரல் மைக் கில்டே அடுத்த மாதம் தன் நான்கு ஆண்டுப் பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.
இதையடுத்து தற்போது துணை தளபதியாக உள்ள லிசா ஃபிரான்செட்டியை படையின் புதிய தளபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துத்துள்ளார். இதன்படி கடற்படையின் முதல் பெண் தளபதி மற்றும் முப்படைகளின் குழுவின் முதல் பெண் என்ற பெருமையை லிசா பெறுவார்.
தற்போது கடற்படைக்கான நடவடிக்கைகளின் துணைத் தலைவராக இருக்கும் திருமதி ஃபிரான்செட்டி, அந்தப் பதவியில் நிச்சயம் அமர்த்தப்படுவார். ஒரு அறிக்கையில், ஜோ பைடன் அட்மிரல் ஃபிரான்செட்டியின் 38 வருட அனுபவத்தைக் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பெண் தளபதி
ஐக்கிய அமெரிக்கா (United States of America / USA / US) ஐம்பது மாநிலங்களும் ஓர் கூட்டரசு மாவட்டமும் ஐந்து தன்னாட்சி ஆட்சி பகுதிகளையும் மற்றும் பல துய்ப்புரிமை உடைய பகுதிகளையும் கொண்ட கூட்டாட்சி அரசியல் குடியரசு நாடாகும்.
3.8 மில்லியன் சதுர மைல்கள் (9.8 மில்லியன் கி.மீ.) பரப்பும் 325 மில்லியன் மக்களும் கொண்ட ஐக்கிய அமெரிக்கா உலகின் பரப்பினடிப்படையில் மூன்றாவது அல்லது நான்காவது மிகப்பெரும் நாடாகவும், மூன்றாவது மிகுந்த மக்கள் தொகை உள்ள நாடாகவும் திகழ்கிறது.
இங்கு ஒரு பெண், கடற்படைக்கு தளபதியாக நியமிக்கவிருப்பது வரவேற்கத்தக்கது.