விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியான “துருவ நட்சத்திரம்” ரிலீஸ் எப்போது தெரியுமா?

 விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியான “துருவ நட்சத்திரம்” ரிலீஸ் எப்போது தெரியுமா?

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 2017ம் ஆண்டே வெளியாக இருந்த படம் துருவ நட்சத்திரம்.

கடந்த 2017-ம் ஆண்டு துருக்கியில் தொடங்கியது படப்பிடிப்பு. இப்படத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ், ராதிகா உட்படப் பலரும் நடித்துள்ளனர்.

துருக்கியில் நடந்த முதல் ஷெட்யூலைத் தொடர்ந்து வேறு சில நாடுகளிலும் படப்பிடிப்பு நடந்தது. விக்ரம் இதில் துருவா, ஜான், ஜோஸ்வா எனப் பல கெட்டப்களில் நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ரிதுவர்மா நடித்துள்ளார். விறுவிறுப்பாகத் தொடங்கிய படப்பிடிப்பு பின்னர் யார் கண்பட்டதோ தெரியவில்லை, வேகம் குறைய ஆரம்பித்தது. இந்நிலையில்தான் மீண்டும் உயிர்பெற்று, கடந்த ஆண்டு படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் சென்னையில் சில நாள்கள் பேட்ச் ஒர்க் வேலைகளும் நடந்தன.

vikram gautham menon images stills

பல வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டாலும் சில பிரச்னைகளால் துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதற்கிடையே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று சமீப நாட்களில் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில்கூட படத்திலிருந்து சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதன்படி காலங்கடந்து படம் ரிலீஸ் ஆவதால் கௌதம் மேனன் சில மாற்றங்களை படத்தில் செய்திருக்கிறாராம். அதன்படி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் டீசரை பார்த்த பலர் இந்த படத்திற்காக ஆவலாக காத்திருக்கின்றனர். துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆவதற்கான சாதக சூழல் இப்போது உருவாகியிருக்கிறது. படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகிவருகின்றன. துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கை படக்குழுவிடமும், ரசிகர்களிடமும் எழுந்திருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படம் வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...