வைரல் நாயகனுக்கு வைரல் இசையமைப்பாளர் பாடிய பாடல்!

 வைரல் நாயகனுக்கு வைரல் இசையமைப்பாளர் பாடிய பாடல்!

வைரல் யூடுயுபர் TTF வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன் “ . மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎஃப் வாசனின் அறிமுகப் பாடலை படத்தின் இசையமைப்பாளர் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎப் வாசன் எனும் இளைஞருக்கு பல லட்ச கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர்.

மஞ்சள் வீரன் திரைப்படத்தை செல்அம் எழுதி இயக்குகிறார். தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் cosmetologist டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணைந்து தயாரிக்கும் படம் “ மஞ்சள் வீரன் “

இந்த படத்தில் 2K கிட்ஸின் கதாநாயகன் பிரபல வைரல் யூடுயுபர் TT.F.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர்.
நடிகர் கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் புதிய அவதாரம் எடுக்க உள்ளார்

இப்படத்தின் ஒளிப்பதிவு கொளஞ்சி குமார் ஏற்றுள்ளார். நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.
ஏனைய கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் செல்அம்
ஏற்கனவே திரு.வி.க.பூங்கா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் ஜன ரஞ்சகமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது மஞ்சள் வீரன்.

ஜூலை மாதம் இறுதியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. சமீபத்தில் டிடிஎஃப் வாசன் நடிக்கும் ‘மஞ்சள் வீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போல வடிவமைக்கப்பட்ட அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் ‘மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎஃப் வாசனின் அறிமுகப் பாடலை அனிருத் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...