“ரெஜினா” திரைப்படம் எப்போது எந்த ஒடிடியில் தெரியுமா?

 “ரெஜினா” திரைப்படம் எப்போது எந்த ஒடிடியில் தெரியுமா?

நடிகை சுனைனா நடித்த ரெஜினா திரைப்படம் தற்போது ப்ரபல ஒடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.

யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, அனந்த் நாக், தீனா கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, அப்பாணி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு பவி K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். டோபி ஜான் படத்தொகுப்பை மேற்கொள்ள, விஜி சதீஷ் நடனம் அமைத்துள்ளார். ஆடை வடிவமைப்பை ஏகன் கவனித்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த ஜூன் 23 அன்று திரையரங்கில் வெளியாகி பல்வேறு நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் ரெஜினா திரைப்படம் தற்போது வரும் ஜூலை மாதம் 25 ம் தேதியன்று அமேசான் ப்ரைம் ஒடிடியில் வெளியாக உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. திரையரங்கில் காண தவறியவர்கள் அசேசான் ஒடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...