நகைச்சுவை நடிகர் லட்சுமணனை சிரிக்கவைத்தோம்!
பல்லாயிரம் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நகைச்சுவை நடிகர் லட்சுமணன்.
சரத்குமார் நடித்த “மாயி” படத்தில் “மின்னலே வாம்மா” என்று அவர் சொல்லும் வசனத்தை யாராலும் மறுக்க முடியாது.
அவருடைய கால் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்தோம்.
அவர் திருமணமாகாத தனி நபர். குறைந்தது 6 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். பட வாய்ப்புகள் இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாகவும் தகவல் வந்தது. அவருடன் தொடர்பு கொண்டு பேசினோம்.
“உங்கள் நகைச்சுவையைப் பார்த்து – கேட்டு – ரசித்து மகிழ்ந்தவர்களில் நாங்களும் அடக்கம்.
உங்களை இப்போது பார்க்க வர இருக்கிறோம். என்ன வாங்கிவர வேண்டும்”
என்று கேட்டோம்.
“அறுவை சிகிச்சையின்போது என் கால் விரல்கள் இரண்டை அகற்றி விட்டார்கள். எனக்கு ஒரு வாக்கரும் ஒரு ஊன்று கோலும் இருந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்” என்றார்.
எமிமா நினைவு அறக்கட்டளை நிறுவனர் மனிதநேயர் சிலம்பரசன், அன்பு சகோதரி எஸ்தர், மனித நேயர் பாலசுப்பிரமணி ஐயா மற்றும் நான் நால்வரும் இணைந்து வாக்கர், ஊன்றுகோல் மற்றும் உணவுடன் அவரைச் சந்தித்தோம். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இந்த உலகில் பணம், பொருள் முக்கியம். ஆனால் மனித உறவுகள் அதைவிடவும் மிக மிக உயர்ந்தது. ஈடு இணையற்றது.
உதவி கேட்காமலே தன்னைத் தேடி வந்த உதவியையும் மனிதர்களையும் பார்த்த அவர் உள்ளுணர்வு எப்படி இருந்தது என்பதை அவருடைய கண்கள் மூலம் அறிந்தோம்.
எங்களிடம் மனம்விட்டு பேசினார். பெரிய அளவுக்கு நம்மால் அவருக்கு உதவ முடியவில்லை. ஆனால், பிரதிபலன் எதிர்பாராத நம் செயல்பாடு அவருடைய உடல்நல மேம்பாட்டுக்கும் சமூகத்தின் மீதும் தம் வாழ்க்கையின் மீதும் அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை பன்மடங்கு உயர்த்தும் என்பது உறுதி!
ஏற்கனவே அவருக்கு உதவுமாறு அவருடைய GPay எண்ணைக் கொடுத்து ஒரு பதிவு போட்டிருந்தோம். அந்த எண் மூலம் நண்பர்கள் சிலர் அவருக்கு உதவி செய்தனர். அவர்களுக்கு இத்தருணத்தில் நம்
உதவும் கைகள் சார்பில் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள்!
புரசை வெங்கடேசன், உதவும் கைகள் 9840914739