இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்

 இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்

அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதை நாட்டு நாட்டு பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த கீரவாணி பெற்றுக் கொண்டனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு ஆஸ்கர் விருதை வென்ற 2வது இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றார் கீரவாணி

2009ம் ஆண்டு slumdog millionaire படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது பெற்று இருந்தார்.

தெலுங்கில் இந்த பாடலை கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச் பாடி உள்ளனர். நாட்டு நாட்டு பாடலுக்கு பிரேம் ரக்ஷித் அமைத்த நடனம் உலகம் முழுவதும் புகழ்பெற்றது.

நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. கோல்டன் குளோப் என்பது அமெரிக்காவின் உயர்ந்த விருதாகும். இதேபோல், ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றது.

யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த ‘The elephant whisperers’ என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும்விழாவில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அறிமுகம் செய்து வைத்தார்.

சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை இந்தியாவின் The elephant whisperers இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர். யானைகளை பராமரிக்கும் முதுமலையில் உள்ள பொம்மன் மற்றும் பெள்ளி ஆகிய தம்பதி குறித்த இந்தப் படத்திற்கு விருது கிடைத்துள்ளது.

தி எலிபன்ட் விஸ்பர்ஸ் ஆவண குறும்படம், முதுமலை தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. அனாதை யானையான ரகுவின் கதை. இந்த யானையை பொம்மா மற்றும் பெள்ளி என்ற தம்பதி பராமரித்து வந்தார்கள். இந்த ஆவணப் படத்தில் யானை மற்றும் தம்பதியிடையேயான உறவு மற்றும் பாசப் பிணைப்பு மட்டும் படமாக்கப்படவில்லை. சுற்றியிருந்த இயற்கைச் சூழலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் படம் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நெட்பிளிக்சில் வெளியானது.

இந்த விருது விழாவில் யாருக்கு என்னென்ன விருதுகள், எந்தெந்த படங்கள் வென்றது என்ற முழு பட்டியல் இதோ

சிறந்த அனிமேஷன் படம் – கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ (Guillermo del Toro’s Pinocchio)

சிறந்த துணை நடிகர் – கே ஹுய் குவான் ( எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)

சிறந்த நடிகை – ஜேமி லீ கர்டிஸ் ( எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் )

சிறந்த ஆவணப்படம் – நவல்னி

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் –  ஆன் ஐரிஷ் குட்பை

சிறந்த ஒளிப்பதிவு – ஜேம்ஸ் ஃப்ரெண்ட் தேர்வு  (ஆல் க்யட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – தி வேல்

சிறந்த ஆடை வடிவமைப்பு – ரூத் கார்ட்டர் ( பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர்)

சிறந்த சர்வதேச படம் – ஆல் க்வைட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட்

சிறந்த ஆவணப்பட குறும்படம் – தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு -கிறிஸ்டியன் எம். கோல்ட்பெக் மற்றும் எர்னஸ்டின் ஹிப்பர் ( ஆல் க்வைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ( அவதார்: தி வே ஆஃப் வாட்டர்)

சிறந்த அசல் திரைக்கதை – டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் )

சிறந்த தழுவல் திரைக்கதை – சாரா போலே ( Women Talking)

சிறந்த அசல் பாடல் –  நாட்டு நாட்டு ( ஆர்.ஆர்.ஆர் ) 

சிறந்த ஒலி – மார்க் வீங்கார்டன், ஜேம்ஸ் எச். மாதர், அல் நெல்சன், கிறிஸ் பர்டன் மற்றும் மார்க் டெய்லர் ( டாப் கன்: மேவரிக்)

சிறந்த எடிட்டிங் – சிறந்த எடிட்டிங் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் )

சிறந்த இயக்குநர் – க்வான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் )

சிறந்த நடிகர் –  பிரெண்டன் ஃப்ரேசர் ( the whale )

சிறந்த நடிகை – மிச்செல் யோவின் ( Michelle Yeoh ) ( எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)

சிறந்த படம் – எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்

சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பின்னாச்சியோ-வுக்கு வழங்கப்பட்டது.

*சிறந்த துணை நடிகருக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் கி ஹு ஹுவானுக்கு அறிவிக்கப்பட்டது.

*சிறந்த துணை நடிகைக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் ஜேமி லீ கர்டிஸுக்கு அறிவிக்கப்பட்டது.

சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது நவல்னி ஆவணப்படத்துக்கு வழங்கப்பட்டது; சிறந்த ஆவணப்படத்துக்கான பிரிவில் போட்டியிட்ட இந்திய படமான All That Breathes-க்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை.

சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது The whale திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது; ஆட்ரியன் மோரோட், ஜூடி சின், அன்னிமேரி பிராட்லி ஆகியோர் ஒப்பனைக்கான ஆஸ்கர் விருதை பெற்றனர்.

சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது All Quiet on the Western Front படத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஃபிரெண்டுக்கு வழங்கப்பட்டது.

An Irish Goodbye-க்கு சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

டாம் பெர்கெலி மற்றும் ராஸ் ஒயிட் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டனர்.

சிறந்த ஆடை வடிவைப்புக்கான ஆஸ்கர் விருது Black Panther Wakanda Forever படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது ஜெர்மனியைச் சேர்ந்த All Quiet On The Western Front படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது All Quiet On The Western Front படத்திற்கு கிடைத்துள்ளது.

சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை வென்றது Alll Quiet On The Western Front படம். Alll Quiet On The Western Front படத்தின் இசையமைப்பாளர் வோர்கல் பெர்டில்மான் ஆஸ்கர் விருதை பெற்றார்.

ஜெர்மனியைச் சேர்ந்த All Quiet on the Western Front என்ற படம் இதுவரை 4 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த சர்வதேச படம், இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிமைப்பு ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த Visual Effects பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ படம்! ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பேன்ஹம், எரின் சேண்டன், டேனியல் பேரட் ஆகியோர் ஆஸ்கர் விருதினை பெற்றுக் கொண்டனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...