துப்பறிவாளர்கள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை

 துப்பறிவாளர்கள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை

தனியார் துப்பறிவாளர்களுக்கான சட்ட அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு துப்பறிவாளர்கள் மற்றும் தனியார் விசாரணையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

TAPD என்ற தனியார் துப்பறியும் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா  சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கப்பட்டது.

தொடக்க விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் டாக்டர் மது “சட்டம் மற்றும் குற்றவியல்  தடையவியல் பட்டதாரி மாணவர்களுக்குத் துப்பறிவு நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். ஓய்வு பெற்ற தகுதி வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் மூலம் பொது மக்களுக்கு குற்றத் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்

இவ்விழாவில்  சிறப்பு விருந்தினராக முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற  கூடுதல் அட்வகேட் ஜெனரல் P.H அரவிந்த் பாண்டியன், முன்னாள் தமிழக டி.ஜி.பி. ஷாம் சுந்தர் (IPS), எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பதிவு பெற்ற  துப்பறிவு நிறுவனங்களில் உள்ள ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், குற்றவியல் நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள், சைபர் குற்றவியல் வல்லுநர்கள் மற்றும் பல்வேறு தனியார் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தனியார் துப்பறியும் துறையின் தலைவர் முன்னாள் விமான படை Dr.N.மது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

“தனியார் துப்பறிவாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும். பொதுமக்கள் வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் நம்பகத்தன்மை உள்ள துப்பறிவு நிறுவனங்களை அரசு கவனம் செலுத்த வேண்டும்.

தேர்தல் மற்றும் அவசர காலகட்டங்களில் காவல்துறையினர் உடன் இணைந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய அங்கீகாரம்” போன்ற கோரிக்கைகளைத் தமிழக அரசுக்கு முன் வைத்தார்

சட்டம் குற்றவியல் தடவியில் மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கு துப்பறிவு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.

ஓய்வு பெற்ற தகுதி வாய்ந்த காவல்துறை அதிகாரி ராணுவ அதிகாரிகள் மூலம் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு முகம் நடத்த அனுமதி வேண்டும் என்றும் நம்மிடம் கூறினார்

தொடர்ந்து பேசிய டாக்டர் மது “தமிழகக் காவல்துறை, பத்திரிகைத் துறை, குற்றவியல் துறை மற்றும் தடயவியல் துறையில் சிறப்பாகச் செயல்படும் அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்களின் சேவையை கௌரவப் படுத்த வேண்டும். மாநில சட்ட அமைச்சகம் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் மூலம் துப்பறிவாளர்கள் மற்றும் தனியார் விற்பனையாளர்களுக்கு என ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். மற்றும் தனியார் துப்பறிவாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...