அரிய நெல்ரகங்களை மீட்டெடுத்த பட்டதாரிப் பெண் சிவரஞ்சனி

 அரிய நெல்ரகங்களை மீட்டெடுத்த பட்டதாரிப் பெண் சிவரஞ்சனி

தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்து சாதித்துள்ளார் பட்டதாரி பெண் சிவரஞ்சனி.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களைத் தனது கணவர் சரவணன் உதவியுடன் தேடிச்சென்று 1,250 நெல் ரகங்களைக் கண்டறிந்து தனது வயலில் பயிரிட்டுள்ளார்.

பழங்காலம் முதல் இந்தியாவில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்ததாகவும், தற்போது அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ரகங்களைக் காண முடிகிறது. தன் வாழ்நாளில் தன்னால் முடிந்த அளவு தொலைந்து போன நெல் ரகங்களை மீட்டு விவசாயிகளிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என உறுதியுடன் உள்ளதாகவும் சிவரஞ்சனி தெரிவித்தார்.

மேலும் அசாம், ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது தேடலை விரிவுபடுத்தி இலுப்பைப்பூ சம்பா, கருங்குருவை, மடுமுழுங்கி, நவரா, பால்குட வாழை, வெள்ள குடவாழை, செம்புலி பிரியன், கடற்பாலி உள்ளிட்ட 1,250 தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு 3 ஏக்கர் வயலில் ஒவ்வொரு நெல் ரகங்களையும் 40 சதுரஅடி என்ற அளவில் அவற்றைப் பயிரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது அவை நன்றாக கதிர்விட்டு உள்ளது. இதனை அறுவடை செய்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விதை நெல்லாக வழங்குவதாகக் கூறினார்.

தங்க தம்பா, சொர்ணமுகி, சொர்ணமல்லி, வாடன் சம்பா, புழுதிக்கார், செங்கல்பட்டு, சிறுமணி, சொர்ணவாரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களையும், ஊட்டச்சத்துக்களையும் உடைய நெல் ரகங்களையும் பயிரிட்டுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாராம்பரிய நெல் வகைகளை இவர் பயிர் செய்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. “பாரம்பரியமான நெல் ரகங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதே எனது இலக்கு” என்று தெரிவித்துள்ளார் சிவரஞ்சனி.

விவசாயத்தை வாழவைக்கும் சகோதரியின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.

செல்வக்குமார், உடுமலை -முகநூல் பக்கத்திலிருந்து…

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...