ஹார்ட் ஆப் ஹாரிஸ் இசை நிகழ்ச்சி

 ஹார்ட் ஆப் ஹாரிஸ் இசை நிகழ்ச்சி

‘யுவன் 25’ இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ்’ இசை நிகழ்ச்சியை நடத்துகிறது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டுகால இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் மலேசியாவில் இருபதாயிரம் யுவன் ரசிகர்கள் முன்னிலையில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம், ‘யுவன் 25’ என்ற இசை நிகழ்ச்சி க்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

‘மஹா’ திரைப்படத்தைத் தயாரித்ததோடு, ‘கபாலி’, ‘VIP 2’ போன்ற பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்த நிறுவனம்தான் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் .

‘யுவன் 25’ நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா, நேஹா பாசின், விஜய் யேசுதாஸ், ஜாவேத் அலி, ஸ்வேதா பண்டிட், டீஜே, சாம் விஷால், பிரியங்கா, விஷ்ணுப்ரியா ரவி மற்றும் தொகுப்பாளராக டி.டி. ஆகியோர் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்தனர். 

இந்த பிளாக்பஸ்டர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் , தற்போது 2023 ஜனவரி 21, சனிக்கிழமை, மாலை 7 மணிக்கு மலேசியாவில் நடக்கவிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் ‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ்’ (Hearts Of Harris ) என்ற இசை நிகழ்ச்சியை நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...