சர்க்கரை நோய்க்குத் தீர்வு தருகிறது இன்சுலின் செடி

 சர்க்கரை நோய்க்குத் தீர்வு தருகிறது இன்சுலின் செடி

எல்லா நோய்களுக்கும் மருந்து, மாத்திரைகள் வந்துவிட்டன. சில கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சர்க்கரை நோய்க்கு மட்டும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. உணவுக் கட்டுப்பாடும் இன்சுலின் ஊசியுமே தீர்வு. எத்தனையோ நோய்களுக்கு மருந்துகள் மாத்திரை வடிவிலும், திரவ வடிவிலும் இருக்கும்போது, இன்சுலின் மட்டும் இன்னமும் ஊசி மூலம் செலுத்த வேண்டிய நிலையே  இருக்கிறது. தினமும் ஊசிப் போட்டுக்கொள்ளும் வலியில் இருந்து விடுதலை தருகிறது, ‘காஸ்டஸ் பிக்டஸ்’ என்ற இன்சுலின் செடி. இந்த இலை ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதோடு நில்லாமல் இது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசையையும் படிப்படியாகக் குறைக்கிறது. 

இன்சுலின் செடி அமெரிக்க நாட்டில் புளோரிடா மாநிலத்தைத் தாயகமாகக் கொண்டது. இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு முன்புதான் அறிமுகமானது. அதிகளவு வளர்த்து விற்பனைக்கு விடும் செடிகளில் இன்சுலின் செடியும் ஒன்று. இதனுடைய அறிவியல் பெயர் காஸ்டஸ் இக்னேஸ். தமிழில் இன்சுலின் செடி என அழைக்கப்படும் இந்தச் செடியை இந்தியில் ஜரூல் மற்றும் கேகண்ட் என்று அழைக்கிறார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதோடு கொலஸ்ட்ராலின் அளவையும் குறைத்து கட்டுக்குள் வைக்கிறது. இந்தச் செடியை நீர்வளம் உள் இடங்களிலும் வீட்டுத்தோட்டங்களிலும்  வீட்டுத் தொட்டிகளிலும் வைத்து வளர்க்கலாம்.

இன்சுலின் செடியின் இலைகள் மா இலை போன்று இருக்கும். அலைகள் அடுக்கடுக்காக விசிறி போலச் சுற்றிக்கொண்டு மேல் நோக்கி வளரக்கூடியது. வாயில் போட்டு மென்று சுவைத்தால் புளிப்பு கலந்த சுவை காணப்படும்.

இந்தச் செடி வளமான ஈரப்பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக்கூடியது. இந்தத் தாவரம் இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். 

வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும்.

உலர்ந்த இலையைப் பொடியாக்கித் தயார் செய்து தேநீராகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்சுலின் அளவு தெரிந்து தேவையான அளவு பொடி சேர்த்துப் பின்னர் அதையே வழக்கப்படுத்திக்கொள்ளலாம். பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது.

இன்சுலின் செடியின் மகத்துவம் பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். இந்தியாவில் கேரள மாநிலத்தின் கொச்சியிலும் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதற்கான நர்சரிகள் உள்ளன. வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் மிக எளிதாக வளர்க்கலாம். இலையின் சுவை சிறிது புளிப்பாக இருக்கும். இன்சுலின் செடியின் 2 இலைகளை சர்க்கரை நோயாளிகள் தினமும் பச்சையாக காலையில் சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது. இதை முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2ஆம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்த்து இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்தச் செடியின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட
வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாகக் குறைக்கிறது.
இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற
நிலையில் உள்ள சர்க்கரை நோயாளிகள் பயனடைவார்கள்.

உடலில் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படும்போது அதற்கு இந்த இன்சுலின் இலை மருந்தாக அமைகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உடலில் நமைச்சல் ஏற்படுகிறது. சர்க்கரை உடல் உறுப்புகளை சிறிது சிறிதாக பாதிக்கும் இயல்பு கொண்டது. முதலில் கண்களை பாதிக்கும். பின்னர் நரம்புகளை பாதிக்கும். எனவே சர்க்கரை நோய்க்கு இந்த இன்சுலின் இலைகள் சிறந்த மருந்தாகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...