பெண் குழந்தைகளைத் தலைநிமிரச் செய்த 111 கன்றுகள்

 பெண் குழந்தைகளைத் தலைநிமிரச் செய்த 111 கன்றுகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிற ஒரு குக்கிராமம், பிப்லாந்திரி (Piplantri) . சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரைக்கும், பெண் குழந்தை பிறந்த செய்திதான் அங்கு மிகப் பெரிய துக்கச் செய்தியாக இருந்தது. காரணம் அவர்கள் சமுதாயத்தில் இருக்கும் வரதட்சணை பழக்கவழக்கம்.

அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரும், சமூக ஆர்வல ருமான ஷியாம் சுந்தர் பலிவால் தன் கிராமத்தின் பெண் குழந்தைகளின் எதிர்காலத் தைக் கருத்தில்கொண்டு ஒரு திட்டத்தை யோசித்து, அரசாங்க உதவியுடன் நடை முறைக்குக் கொண்டுவந்தார்.

ஷியாம் சுந்தர் பலிவால்

ஷியாம் சுந்தர் பாலிவால் தன் இறந்துபோன மகளின் ஞாபகமாக இந்தத் திட்டத் திற்கு ‘கிரண் நிதி யோஜனா’ எனப் பெயரிட்டார். இந்தத் திட்டத்திற்கு ஆரம்பத்தில், பல தடைகள் இருந்தது. மக்களும் பெரிதாக ஒத்துழைக்கவில்லை. பிறகு அந்தக் கிராமத் திற்கு, அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை அளித்தது, ஷியாம் சுந்தர் பலிவாலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதன் காரணமாக மக்கள் ஊக்குவிக் கப்பட்டனர். கொஞ்சம் கொஞ்சமாகத் திட்டத்திற்கு அந்தக் கிராமமே ஆதரவு அளித்தது.

என்ன திட்டம் அது?

பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் திட்டம்.அதாவது ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் பெற்றோர், உறவினர்கள் 111 மரக்கன்றுகளை நடவேண்டும்.

நட்ட மரக்கன்றுகளின் பராமரிப்புகளை கிராமப் பஞ்சாயத்து மற்றும் தன்னார்வலக் குழுக்கள் கவனித்துக்கொள்ளும்.

பிறந்த பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, பெற்றோரிடம் பத்தாயிரம் ரூபாயும் கிராம பஞ்சாயத்து மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவி யுடன் கூடுதலாக 21,000 ரூபாய் ஆக மொத்தம் 31 ஆயிரம் ரூபாய் வங்கியில் Fixed டெபாசிட் செய்யப்படும்.

அதேபோல், பெண் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்த, பத்திரத்தில் பெற்றோ ரிடம் திட்ட அம்சங்கள் எழுதப்பட்டு ,கையொப்பம் வாங்கப்படும்.

பத்திரத்தில் உள்ள அம்சங்கள் :

1) எங்கள் குடும்பத்தில் உள்ள யாரும் பெண் சிசு கொலைகளைச் செய்ய மாட்டோம்.

2) நடப்பட்ட 111 மரங்களும் எங்கள் மகளுக்குச் சமமான அக்கறையுடன் வளர்க்க படு வார்கள்.

3) எங்கள் மகளுக்கு கல்வி கட்டாயமாகக் கற்றுவிக்கப்படும்.

4) எங்கள் மகளுக்கு, குழந்தைத் திருமணம் செய்ய மாட்டோம்.

5) Fixed டெபொசிட்டில் உள்ள பணம் எங்கள் மகளின் திருமணத்திற்காகவே செலவிடப் படும்.

6) நாங்கள் நட்ட மரங்கள் அனைத்தும் இந்தக் கிராமத்தின் சொத்து.

18 வருடங்கள் கழித்து, பெண் குழந்தை வளர்ந்ததைப் போல், நட்ட மரக்கன்றுகளும் பெரிய மரமாக வளர்ந்திருக்கும்.

18 வருடங்களின், Fixed டெபொசிட்டில் உள்ள பணமும் சில லட்சங்களாக பெருகியிருக் கும். இந்தப் பணம் கண்டிப்பாகத் திருமணத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும்.

அதே போல், ஒரு மரத்தினால் வருடத்திற்கு 5000 ரூபாய் வருமானம் கிடைத்தது என்றாலும் 18 வருடங்களில் கிட்டத்தட்ட ஒரு மரத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக் கும். அப்போது வளர்க்கப்பட்ட 111 மரங்களால் 18 வருடங்களில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

இதுபோக, சுத்தமான சுவாசக்காற்று, சுற்றுசூழல் பாதுகாக்கப்பட்டு மண் வளமும் விளைச்சலும் காக்கப்படும்.

மரங்களின் மூலம் பிப்லாந்திரி மக்களுக்கு வேலை வாய்ப்பும் பெருகியது.

ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன்  அன்று பெண் குழந்தைகள் வளர்க்கப்படும் மரங்களுக்கு கயிறு கட்டுவர்.

இவை அனைத்தும் ஒரு பெண் குழந்தை பிறந்ததனால் உண்டான பலன். கல்வி பெற்று அவளும் பலன் அடைந்தாள். கிராமமும் பலன் அடைந்தது.

கடந்த ஆண்டு நடந்த கணக்கீடுபடி, பிப்லாந்திரி கிராமத்தில் 810 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. அதாவது 89 லட்சத்து 910 மரங்கள் பராமரிக்கப்படுகிறது.

ஒரு பெண் பிறந்ததனால் உண்டான பலன்களைக் கண்டோம்.

810 பெண்கள் என்றால் பெண்களும் கிராமமும் அடைந்த பலன்களை நினைத்துப் பாருங்கள். கிராமத்தின் நுழைவாயிலில் ஒரு பெரும்பலகையில் கடந்த ஆண்டு பிறந்த பெண் குழந்தைகளின் பெயர் குறிப்பிட்டிருக்கும்.

ஷியாமின் இந்தத் திட்டத்தை அறிந்த பல கிராமங்கள், இதே திட்டத்தைச் செயல் படுத்துகின்றனர். இந்தத் திட்டம் இவருக்குப் பல விருதுகளையும் பெற்றுத் தந்தது. இந்தக் கிராமத்தைப் பற்றியும் இந்தத் திட்டத்தைப் பற்றியும் டென்மார்க் பள்ளிப் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷியாமின் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட ராஜஸ்தான் அரசாங்கம் 2016ஆம் ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதாவது பெண் குழந்தை பிறந்தவுடன் அரசாங்கம் அந்தக் குடும்பத்திற்கு 2500 ரூபாய் அளிக்கும். பெண் குழந்தை யின் முதல் பிறந்த நாளன்று மேலும் 2500 ரூபாய் அளிக்கும். இந்த 5000 ரூபாய் அவள் 5ஆம் வகுப்பு கடந்தவுடன் இரட்டிப்பாகும். 8ஆம் வகுப்பு கடந்தவுடன் மேலும் இரட்டிப் பாகும் .பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் 35,000 ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம் 50,000 ரூபாய் கிடைக்கும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தக் கிராமத்தை மையமாக வைத்து ‘பிப்லாந்திரி’ எனும் மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படமும் வந்தது.

ஒரு மனிதனால் சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவர முடியும் என்பதற்கு ஷியாம் சுந்தர் பாலிவால் ஒரு முழுமையான சான்று.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...