உலகப் பெண் குழந்தைகள் தினம்

 உலகப் பெண் குழந்தைகள் தினம்

‘பெண்ணின் பெருந்தக்க யாவுள?’ என்றார் வள்ளுவர். ‘பெண்ணின் பெருமை’ என்கிற நூலை எழுதி பெண்களின் சிறப்பை விளக்கினார் திரு.வி.க. பெண்ணைப் போற்றி வளர்த்தால்தான் அந்த நாடு மனவளத்தோடு சிறக்கும். ‘எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்றார் பாரதியார். ஆன்றோர் எல்லாம் போற்றிப் புகழ்ந்த பெண் குழந்தைகளின் வளர்ப்பைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நாள் உலகப் பெண் குழந்தைகள் தினம் இன்று. அக்டோபர் 11.

பெண்குழந்தைகளை எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று பாரதியார் எழுதிய ஒரு பாடல் போதுமான சான்று.

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்

றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்

வீட்டுக்குள்ளே பெண்ணைப்

பூட்டிவைப்போமென்ற

விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். 

கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். 

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி.”

ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதைக் குடும்பமும் சமூகமும் உற்சாகத் துடன் கொண்டாட வேண்டும். பெண்களைப் பற்றிப் பெருமிதம் கொள்ளுங்கள்.

ஒரு குடும்பத்தின் மொத்த உணர்ச்சிக் கலவையும் பெண் குழந்தையை அடிப்படையாகக்கொண்டே வெளிப்படுகிறது. பெண் குழந்தை பிறப்பைக் கொண்டாடும் வகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பாராட்டத்தக்கது. எனினும், இன்றும் பெண் குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை  பல இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பெண் என்பவள், சுமையோ அல்லது கணவன் வீட்டிற்கான பெண் என்கிற மனோபாவத்தை மாற்ற வேண்டும். ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு இடையில் வேறுபாடு பார்க்காமல் சமத்துவத்தை மேம்படுத்த வேண்டும். 

இந்தியச் சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள்,  பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதன் அவசியம்  குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்புவதே இந்த நாளின் நோக்கம்.

சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சமஉரிமை, சமவாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது

ஆண்டுதோறும், ஒரு புதிய கருப்பொருளின் அடிப்படையில், பெண் குழந்தை களுக்கான தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.

2019ஆம் ஆண்டில், ‘ஒளிமயமான நாளுக்காகப் பெண்களை மேம்படுத்துதல்’ என்றும், 2020இல் ‘எனது குரல், எங்கள் பொதுவான எதிர்காலம்’ என்றும், 2021 இல், ‘டிஜிட்டல் தலைமுறை, எங்கள் தலைமுறை’ என்பதும் தேசியப் பெண் குழந்தைகள் தினத்திற்கான கருப்பொருளாக  இருந்தது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் அறிவிக்கப்படவில்லை.

இந்த தினம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டு, இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தடுப்பது, பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்வது ஆகியவை இந்நாளின் அடிப்படை நோக்கமாகும்.

தற்போதைய சூழலில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தா லும், அவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றனவா என்பது சந்தேகமே. அனைவரும் முதலில் குடும்பத்தில் தங்கள் பெண் குழந்தைகளை மதிப்பான முறையில் நடத்த ஆரம்பிக்க வேண்டும். இதுவே, சமூகத்திலும் மாற்றத்தை உண்டாக்கும். 

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...