சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் மிதிலாபுரி திருமண மண்டபத்தில் 05.12.2025 காலை 10.00 மணிக்கு பள்ளி மாணவி பிரியங்காவின் பாடலுடனும், தார்னிகாவின் அற்புதமான நடனத்துடனும் துவங்கியது ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. கோ.வசந்த குமாரி வரவேற்றார்.

உரத்த சிந்தனை அமைப்பின் துணத்தலைவரும், சென்னை ஸ்ரீ ராம் சமாஜத்தின் தலைவருமான ஆடிட்டர் திரு.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இனிதே தொடக்கவுரை ஆற்றினார். ஸ்ரீ ராம் சமாஜத்தின் செயலாளர் திரு.ஆ.வி.ராமன் முன்னிலை வகித்தார்.
மாணவன் புவனேஷ்,
தனுஷ்,
ரஞ்சன்,
மேகநாதன்,
கமலி .
மிருதுளா
ஆகியோர் சிறப்பாகப் பேசினர். அரங்கத்தில் உள்ளவர்களை தன் பேச்சாற்றலால் கவர்ந்த மிருதுளா என்ற மாணவியைப் பாராட்டி ஆயிரம் ரூபாய் சிறப்புப் பரிசாக வழங்கப்பட்டது.
Savitri Foundation நிறுவனரும் பிரபல ஆடிட்டாருமான திரு.பாலசுப்ரமணியம் அவர்கள், தனது உரையில், மாணவர்கள், பாரதியாரின் சிந்தனைகளைப் படிப்பது மட்டுமின்றி பின் பற்றி நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விஷன் அன்லிமிடெட் நிறுவனரான முனைவர் திரு. பாலசாண்டில்யன் தனது வாழ்த்துரையில் “புதியன விரும்பு, பணத்தினைப் பெருக்கு, நினைப்பது முடியும்” ஆகிய மூன்றினை மாணவர்கள் பின்பற்றி நடந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம் என்றார்.
பிரபல எழுத்தாளரான திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் பள்ளிப் பருவம் தான் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளக் கூடிய காலமாகும். மாணவர்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு எழுத்தாற்றல், பேச்சாற்றல், பிற கலைகளை வளர்த்துக் கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
சாய் சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர், முனைவர் திரு. பஞ்சாபகேசன் மாணவர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க என்று கூறினார். “நல்ல பேரை வாங்கவேண்டும் ” என்ற பாடலைப் பாடினார்.
உரத்த சிந்தனை அமைப்பின் தலைவர் திருமதி. பத்மினி பட்டாபிராமன் பேச்சரங்கில் பேசிய மாணவர்களின் பேச்சில் இருந்து கேள்விகள் கேட்க அதற்கு சரியான பதில் கூறியவர்களுக்கு பட்டுக்கோட்டை பிரபாகர் தன் நூலைப் பரிசாக வழங்கினார்.

திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தனது உரையில் மாணவர்கள் நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைப் பின்பற்றி நம் பாரதம் உலகத்தில் சிறந்த வல்லரசாக விளங்குவதற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார்.
உரத்த சிந்தனை அமைப்பின் செயலாளர் திரு.உதயம்ராம் நிகழ்ச்சியை நேர்த்தியாக தொகுத்து வழங்கினார். உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர் திரு.எஸ்.வி.ராஜசேகர் நன்றி கூறினார்.
படங்கள் : உதயம் ராம்
செய்தித் தொகுப்பு : ஜி.சுப்பிரமணியன்
காணொலித் தொகுப்பு : மு மனோன்மணி

