04.12 2025 காலை 10.,30 மணிக்கு, திருநின்றவூரின் கசுவா கிராமத்தில் உள்ள மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியை திருமதி. அபிராமி பாடிய “அச்சமில்லை அச்சமில்லை” என்ற பாரதியின பாடலுடன் துவங்கியது.

திருமதி. காஞ்சனா அனைவரையும் அன்புடன் வரவேற்றார். சேவாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான சேவைச்சுடர் திரு.வா.முரளிதரன் அவர்கள் மகாகவி பாரதியார் படத்தை திறந்து வைத்தார் . திரு.உதயம் ராம், திரு.பஞ்சாபகேசன், திரு.ஜி.சுப்பிரமணியன் ஆகியோர் பாரதியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தபின்.அனைவரும் குத்துவிளக்கு ஏற்றினர்.
திரு.முரளிதரன் தனது தலைமை உரையில் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் ஆகிய மூவருடைய எண்ணங்களின் பிரதிபலிக்கும் வகையில் இப்பள்ளி துவங்கி 37 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெறுகிறது என்றார். ஆண்டு தோறும் பாரதியின் திருமண நாளைக் கொண்டாடி வருவதாக தனது தலைமை உரையில் கூறி மகிழ்ந்தார்.
செல்வி.யாஷிகா,
செல்வி.சின்ரல்லா, செல்வி.பிரியலதா, செல்வி.தர்ஷினி ஆகியோர்
பாரதி பாடல்களை மிக அருமையாகப் பாடினர்
பள்ளி மாணவிகளான செல்வி.S.வினோதினி, S.திவ்யாஸ்ரீ.
P.அக்க்ஷயா, P.கனிஷ்கா,
A.D.இனியாஸ்ரீ,
K.லிகிதா, ஆகியோர்
சிறப்பாக நடனம் ஆடினர்.
S.யாஷிகா,
R.M.சௌந்தர்யலஷ்மி,
U.ரிஷா
K.காவியா,
வேல்முருகன்,
P.திவாகர்

ஆகிய மாணவர்கள் சிறப்பகப் பேசினர் . மிகவும் அருமையாகப் பேசிய காவியாவைப் பாராட்டி ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு வழங்கப்பட்டது. பேச்சரங்கில் பேசிய ஒவ்வொரு மாணவரின் உரையில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் தந்த ஆறு பேருக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் நூல் பரிசாக வழங்கப்பட்டது.
உரத்த சிந்தனை அமைப்பின் இணைச் செயலாளர் திரு.கோ.சுப்பிரமணியன்
தனது வாழ்த்துரையில் பாரதியின் பாப்பா பாட்டில் கூறப்பட்டுள்ள , ” ஒரு குழந்தையை வையாதே பாப்பா ” என்ற வரியை மாணவர்கள் பின்பற்றி நடக்கவேண்டும் என்றார்.
சென்னை சாயி சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பள்ளியில் பணியாற்றிய இரண்டு ஆசிரியர்களுக்கு தலா 5000 தந்து கௌரவித்தார். அதன்பின் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைத்துமாணவ மாணவிகளுக்கும் பரிசளித்ததோடு, சேவாலயா நிறுவனத்திற்கு Rs.50000/- நன்கொடை அளித்தார்.

தனது சிறப்புரையில், ” நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்கிறது ” என்ற திரைப்பட பாடலைப் பின்பற்றி மாணவர்கள் தங்களா வாழ்வின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட சேவாலயாவிற்கு
வாழ்வில் வளம் பெற்றபின் நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார். நிறைவாக ஓவியர் மணி நன்றி கூறினார்
