சிரஞ்சீவி நடிப்பில் ‘காட்பாதர்’ தமிழில் வெளியீடு

 சிரஞ்சீவி நடிப்பில் ‘காட்பாதர்’ தமிழில் வெளியீடு

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள ‘காட்பாதர்’ திரைப்படம் தெலுங்கில் கடந்த
அக்-5 ஆம் தேதி வெளியானது.  

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படத்தை தான் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அதேசமயம் இந்தப் படத்தை தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக மிகவும் நேர்த்தியாக ரீமேக் செய்து மோகன்ராஜா இயக்கியிருந்தது இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. படத்தின் கதாநாயகியாக நடித்த நயன்தாரா மற்றும் நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஆகியோரின் பங்களிப்பும் இந்தப் படத்தின் சிறப்பம்சமாக அமைந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

‘காட்பாதர்’ படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் மோகன்ராஜா இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 100 கோடி வசூல் என்கிற இலக்கை தாண்டி இன்னும் வரவேற்புடன் இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

பிரித்திவிராஜ் இயக்கிய ‘லூசிபர்’ படத்தை தெலுங்கில் மோகன் ராஜா ரீமேக் செய்கிறார். மோகன்லால் மலையாளத்தில் நடித்த வேடத்தை தெலுங்கில் சிரஞ்சீவியும், அங்கு மஞ்சு வாரியார் நடித்த வேடத்தை தெலுங்கில் நயன் தாராவும் நடிக்கின்றனர். மஞ்சு வாரியாருக்கு கதைப்படி தனது முதல் கணவர் மூலம் டீன் ஏஜ் வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும். மேலும், அவரது இரண்டாவது கணவராக வரும் விவேக் ஓபராய் தான் படத்தின் பிரதான வில்லன். இதுபோன்ற வேடத்தை நயன்தாரா செய்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அந்த வேடத்தில் தான் நயன்தாரா நடித்தார்.

இந்தப் படத்தில் சல்மான்கான், சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷாயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆந்திரா, தெலங்கானாவில் இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 14ம் தேதி தமிழகத்திலும் இந்தப் படம் வெளி யாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் தமிழ் பதிப்பிற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் இதன் தமிழ்ப் பதிப்பும் வெளி யாக இருக்கிறது. அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...