விஜய் மக்கள் மன்றத்தினர் வழங்கிய நலத் திட்ட உதவிகள்

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் முதன்முறையாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ் கலாச்சாரமான சிலம்பாட்டப் பயிற்சி வகுப்பு ராணிப் பேட்டை மாவட்டம் திமிரி நகரத் தலைமை மன்றத்திரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை 96 மாணவர் கள் பயிற்சி பெறுகிறார்கள்.

அனைவருக்கும் சீருடை  வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கும் சிலம்பாட்ட ஆசிரியர் அஜய்க்கு திமிரி நகரத் தலைமை உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து மாதந்தோறும் 20 ஆயிரம்  சம்பளமாக வழங்கப்படுகிறது.

இன்று சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து முன்னிலையில் பயிற்சி பெறும் அனைவரும் சிலம்பாட்டத்தைச் செயல்படுத்திக் காட்டினார்கள்.  

மேலும் நடிகர் விஜய்யின் உத்தரவின்படி ராணிப்பேட்டை மாவட்டம் தொண்டரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மணிகண்டன் ஆட்டோ வழங்குவதற்கு ரூ. 1,20,000 முன்பணம் செலுத்தி, தொண்டரணித் தலைவர் ரமேஷ் முன்னிலையில் நாகராஜ் என்பவ ருக்குப் பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து இலவச ஆட்டோவினை வழங்கி னார். மேலும் ஆட்டோ தொழில் செய்து மாதத் தவனை ரூ.7,500யை  நாகராஜ் செலுத்திக் கொள்வார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மோகன் MC, மாவட்டச் செயலாளர் காந்திராஜ் MC, இளைஞரணி தலைவர் வினோத், மாணவரணி தலைவர் தீனா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!