இலக்கியச்சோலை – 13ஆம் ஆண்டு விழா

இலக்கியச்சோலை, திங்களிதழ் சார்பாக 13ஆம் ஆண்டு விழா 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3 மணி அளவில் இக்சா மையம் (ஜீவனஜோதி ஐடிஐ) (ICSA Centre), 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 600 008. (கன்னிமாரா நூலகம் மற்றும் மியூசியம் எதிரில்) நடைபெற்றது.

அது சமயம் இலக்கியச்சோலை’ 13ஆம் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. ‘இலக்கியச்சோலை’யின் வாழ்நாள் உறுப்பினர்களுக்கு (2021-22) ‘இலக்கியச் சோலையின் இமயம்’ விருது வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து கவியரங்கமும் கருத்தரங்கமும் நடைபெற்றது. சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில் முன்னாள் அரசவைக்கவிஞர், திரைப்பட பாடலாசிரியர். திரு.முத்துலிங்கம் அய்யா அவர்கள் கையால் “அமுதக் கவிஞர்” விருது பெற்று உரையாற்றினார் முகில் தினகரன் அவர்கள்.

வாசகர்களுக்கு பரிசளித்தப்பின் வாழ்த்தரங்கம் இனிதாய் நடைபெற விழா நிறைவுற்றது.

சோலை தமிழினியன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!