சிரஞ்சீவியுடன் சல்மான்கான் நடிக்கும் ‘காட்பாதர்’

 சிரஞ்சீவியுடன் சல்மான்கான் நடிக்கும் ‘காட்பாதர்’

சூப்பர்குட் பிலிம்ஸ்சின் 94வது படமாகத் தயாராகியுள்ள ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடித்த ‘காட்பாதர்’. இந்தப் படம் அக்டோபரில் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

நல்ல கதையம்சம் கொண்ட தரமான படங்களை மட்டுமே தயாரிப்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவ னங்களில் ஒன்றுதான் ஆர்.பி.சௌத்ரியின் ‘சூப்பர்குட் பிலிம்ஸ்’ நிறுவனம். கடந்த 3௦ வருடங்களுக்கு மேலாக படத் தயாரிப்பில் 95 படங்கள் என்கிற பிரம்மாண்ட இலக்கை இந்த நிறுவனம் எட்டியுள்ளது என்றால் அது சாதாரண விஷயம் இல்லை.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் 94-ஆவது படமாக  சிரஞ்சீவி நடிக்கும் ‘காட்பாதர்’ படம் தயாராகி உள்ளது. சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் NV பிரசாத்  இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இயக்குநர் மோகன்ராஜா  இயக்கியுள்ளார். பல வெற்றிப் படங்களைக் கொடுத்த மோஹன் ராஜா மிகப் பிரம்மாண்டமாக இயக்கியுள்ள படம் இது.

சூப்பர் ஹிட்டான லூசிபர் திரைப்படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி உள்ளது. கடந்த 2019-இல் மலையாள மொழியில் வெளியான இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்திருந்தார். நடிகர் பிருத்விராஜ் இந்த படத்தை இயக்கி இருந்தார். பாக்ஸ் ஆஃபிஸில் கலெக்‌ ஷனை அள்ளிய திரைப்படம் இது.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்துள்ளார். முக்கியமான வேடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்  நடிகரான சல்மான் கான் முதன்முறையாக தென் னிந்திய மொழிகளில்  நடித்துள்ள படம் இது. வில்லனாக சத்யதேவ் நடிக்க, முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே,  தான்யா ரவிச் சந்திரன், சுனில், முரளி சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள் ளார். மார்த்தாண்டா கே.வெங்கடேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வரு கிறது. ‘காட்ஃபாதர்’  அக்டோபரில்  அகிலமெங்கும் வெளியாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 96வது படமாக பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் மலையாளத்தில்  ‘ஹனுமான்’  மற்றும் தமிழில் ‘டாப் கியர்’ படம் தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *