தமிழ் சினிமாவின் தந்தை ஆர். நடராஜ முதலியார்

 தமிழ் சினிமாவின் தந்தை ஆர். நடராஜ முதலியார்

தென்னிந்தியாவின் முதல் கனவு தொழிற்சாலையை சென்னை புரசைவாக் கத்தில் நிறுவியவர் வேலூர் நடராஜ முதலியார். இவர்தான் தமிழ் சினிமா வின் தந்தை என்று போற்றப்பட்டவர்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் சினிமா, மௌனப்பட உரு வில் சென்னையில் ஜனனம் ஆனது. தென்னாட்டின் முதல் சலனப்படமான ‘கீசக வதம்’ 1916ஆம் ஆண்டு சென்னையில் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக திரையிடப்பட்டது. தமிழ் சினிமாவின் முதல் சலனப்படத்தைத் தயாரித்த வர் ஆர். நடராஜ முதலியார்தான். இச்சாதனையை நிகழ்த்திய முதலியாரை ‘தென்னிந் திய சினிமாவின் தந்தை’ என்று அழைப்பது சாலப்பொருந்தும்..

இந்தியாவின் முதல் முழு நீளக்கதைப் படமான ‘புண்டாலிக்’ 1912ம் ஆண்டு ஆர்.ஜி.டோர்னி என்ற ஐரோப்பியரால் திரையிடப்பட்டது. இதுவே இந்தியா வில் முதலில் தயாரிக்கப்பட்ட துண்டு படமாகும். இதைத் தயாரித்தவர் வெளிநாட்டவர் என்பதால்,  இந்தியாவின் முதல் திரைப்படம் என்ற தகுதி யைப் பெற அந்தத் துண்டுப்படம் தவறிவிட்டது.. இதற்குப் பின்  கோவிந்த பால்கே தயாரித்த ‘ஹரிச்சந்திரா’ மௌனப் படம் 1913ல் இந்தியாவில் வெளியானது. ‘ஹரிச்சந்திரா’ 1913ஆம் ஆண்டு, தாதா சாகேப் பால்கே என்ற மராத்தியரால் தயாரிக்கப்பட்டு, மும்பை காரனேஷன் தியேட்டரில் வெளி யிடப்பட்டது.

இப்படத்தை வெளியிட்டதன் மூலம், தாதா சாகேப் பால்கே இந்தியத் திரைப் படத் தந்தை என்று போற்றி புகழப்படுகிறார். இவர் தயாரித்த ‘ராஜா ஹரிச் சந்திரா’ என்ற சலனப்படம் சென்னை கெயிட்டி தியேட்டரில் 1914ம் ஆண்டு திரையிடப்பட்டது. இப்படத்தை சென்னையில் மோட்டார் கார் வியாபாரம் செய்துவந்த இளைஞர் ஒருவர் சென்னை கெயிட்டி தியேட்டருக்குச் சென்று பார்த்தார்.. விளைவு, தான் நடத்தி வந்த மோட்டார் கம்பெனியை சென்னை சிம்சன் கம்பெனிக்கு விற்று, அதில் கிடைத்த வருவாயில் சலனப் படம் தயாரிக்க ஆர்வம் கொண்டார். அந்த இளைஞரின் பெயர் ஆர். நடராஜ முதலியார். ஆரம்பத்தில் வெளிநாடுகளிலிருந்து மிதிவண்டிகளை வாங்கி வியாபாரம் செய்து வந்தவர் நடராஜ முதலியார். பின்னர், தொழிலில் ஏற் றம் அடைந்தபின், கார்களை இறக்குமதி செய்யும் தொழிலில் இறங்கினார்.

சலனப்படத் தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகமாகியிருந்த வேளை யில், அதை முழுமையாக அறிந்துகொள்ள, அதில் தேர்ந்த நிபுணர் ஒருவ ரைத் தேடி அலைந்தார்

இவருக்கு உதவியவர் அப்பொழுது சென்னையில் ‘ஸ்டுட்பேக்கர்’ என்ற மோட்டார் கம்பெனியில் மேனேஜராகப் பணியாற்றிய ஒரு ஆங்கிலேயர். இந்த ஆங்கிலேயர், நடராஜ முதலியாரை பூனாவில் உள்ள ‘ஸ்மித்’ என்ற ஆங்கிலேயப் புகைப்பட நிபுணரிடம் அனுப்பி வைத்தார். ஸ்மித்,

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றிய கர்சன் பிரபுவின் டெல்லி அலுவலகத்தில், சிறப்புப் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இவர் கர்சன் பிரபுவின் டெல்லி ஆட்சி நிர்வாகத்தைத் துண்டுப் படமாகத் தயாரித்து புகழ்பெற்றார். எனவே ஸ்மித்திடம் சலனப் படத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வேண்டி, 1915ஆம் ஆண்டு பூனா நகருக்கு முதலியார் பயணம் மேற்கொண்டார்.

முதலியாரின் ஆர்வத்தை பாராட்டிய ஸ்மித், சினிமா ஒளிப்பதிவு நுணுக் கங்களைச் சொல்லிக் கொடுத்தார். முதல் நாள் பயிற்சியிலேயே, மூவி கேமராவை எப்படி கையால் கழற்றி சீராக இயக்குவது என்பது பற்றிய தொழில் நுட்பங்களை, முதலியாருக்குச் செயல் விளக்கம் செய்து காண் பித்தார் ஸ்மித். பின்னர் தனது கேமிராவை முதலியார் கையில் கொடுத்து, துண்டுப் படம் ஒன்றைத் தயாரிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். ஸ்மித் தின் ஆலோச னையை ஏற்று, ஒரு துண்டுப் படத்தை முதலியார் பூனாவில் தயாரித்து, தன் குருவான ஸ்மித்திடம் ஒப்படைத்தார்.

ஸ்மித் வீட்டில் நடைபெற்ற ஒரு இரவு விருந்தின்போது அப்படம் திரை யிடப்பட்டது.. ஸ்மித்தும் அவரது மனைவியும், முதலியாருடன் அமர்ந்து அப்படத்தைப் பார்த்தனர். திரையிடப்பட்ட அப்படத்தில் தோன்றிய நபர் களின் நடையும், அசைவுகளும் ஒரே சீராக அமையாமல் விந்தையாகவும், கோமாளித்தன மாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

படத்தைப் பார்த்த ஸ்மித் தம்பதி, கேலியாகச் சிரித்து மகிழ்ந்தனர். படம் சரியாக அமையாதது கண்டு மனம் தளர்ந்த முதலியாரை ஸ்மித் தேற்றி உற்சாகப்படுத்தினார். சில மாதங்கள் பூனாவில் தங்கி பயிற்சியைத் தொட ரும்படி கேட்டுக்கொண்டார். முதன்முறை ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியால், இந்த முறை கேமிராவைச் சரியாக இயக்குவதற்கான பயிற்சியை முதலியார் முழுமையாகக் கற்றறிந்தார்.

பூரண பயிற்சிக்குப் பின், பூனாவிலிருந்து சென்னை திரும்பினார் நடராஜ முதலியார். சென்னை திரும்பிய அவர், தனது புதிய படப்பிடிப்பு நிலை யத்தை சென்னை, கீழ்ப்பாக்கம் மில்லர் சாலையில் அமைந்த ‘டவர் ஹவுஸ்’ என்ற பங்களாவில் 1916ஆம் ஆண்டு தொடங்கினார். தான் தொடங்கிய ஸ்டூடியோவிற்கு ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்று பெயர் வைத்தார். இதுதான் தென்னிந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட சினிமா ஸ்டுடியோ என்பது வரலாற்றுச் செய்தி..

ஸ்டூடியோவை ஸ்தாபிதம் செய்த முதலியார், சென்னையில் மௌனப் படம் தயாரிக்க விரும்பினார். அதற்குத் தேவைப்பட்ட கச்சா பிலிமை லண்டனுக்கு தந்தி கொடுத்து, இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு இறக்கு மதி செய்தார். கச்சா பிலிமை இறக்குமதி செய்வதற்கு, பாம்பே கோட்டக் பிலிம் கம்பெனி யில் வேலை பார்த்த ‘கார்பென்டர்’ என்ற ஆங்கிலேய நண்பர் உதவி புரிந்தார். படப்பிடிப்பு கேமராவை பூனாவிலேயே ஸ்மித் திடமிருந்து விலைக்கு வாங்கியிருந்ததனால், கேமிராவைப் புதிதாக வாங்க வேண்டிய அவசியம் முதலி யாருக்கு ஏற்படவில்லை.

சலனப் படமெடுக்கும் முயற்சியை 1916ஆம் ஆண்டு சென்னையில் முதலி யார் தொடங்கினார். படத்தில் நடிப்பவர்களுக்குப் பயிற்சி அளிக்க, ‘சுகுன விலாச நாடகச் சபை’யில் அப்போது ஸ்திரிபார்ட்டாக நடித்துவந்த ரங்கவடி வேலு என்ற புகழ்பெற்ற நாடக நடிகரை அமர்த்திக்கொண்டார். தன்னால் எடுக்கப்பட்ட நெகடிவ் பிலிம் ரோலை டெவலப் செய்து கொள்வதற்கு வசதி யாக, பிலிம் லேபரட்டரி ஒன்றை பெங்களூருவில் நிர்மாணித்துக்கொண் டார்.

லேபரட்டரியில் வேலை செய்வதற்காக நாராயணசாமி என்பவரைப் பணி யில் அமர்த்தினார். படப்பிடிப்பின்போது தனக்கு உதவியாளராகப் பணி யாற்ற ஜெகநாத ஆசாரி என்ற நபரையும் அமர்த்திக் கொண்டார். பிரபல நாடக ஆசிரியரான எம்.கந்தசாமி முதலியார், இவரது மௌனப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்டு அணுகி, நடராஜ முதலியார் அதை நிராகரித் ததாகவும் சொல்வார்கள்.

1916ஆம் ஆண்டு ‘கீசகவதம்’ என்ற மகாபாரதத்தின் கிளைக் கதையை மௌனப் படமாக சென்னையில் தயாரித்தார். இதற்கு முன்பே 1913களில் தொடங்கி, தொடர்ந்து மராட்டியத்தில் தாதா சாகேப் பால்கே மவுனப்படங் களைத் தயாரித்து வெளியிட்டு வந்தார்.

அந்தக் கணக்கின் அடிப்படையில்தான் சினிமா நுாற்றாண்டு விழா கொண் டாடப்படுகிறது. மராட்டியத்தை அடுத்து இந்தியாவில் இரண்டாவதாக மவுனப்படத்தைத் தயாரித்த மாநிலம் தமிழ்நாடு. அதைத் தயாரித்தவர் ஒரு தமிழர், அவர் நடராஜ முதலியார்.

நடராஜ முதலியாரால் எடுக்கப்பட்ட ‘கீசகவதம்’தான் தென்னிந்தியாவில் தமிழர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட முதல் சலனப்படம்.

‘கீசகவதம்’ படத்திற்கான படப்பிடிப்பு, சென்னையில் 35 நாட்கள் நடை பெற்றன. இவரே தமிழ் சினிமாவின் முதல் இயக்குநர் என்றும் சொல்ல லாம். 6000 அடி நீளத்தில், 35,000 ரூபாய் செலவில் ‘கீசகவதம்’ 1916ம் ஆண்டில் வெளியானது. அடுத்தடுத்து தனது தயாரிப்பில் ஆறு படங்களைத் தயாரித்தார் நடராஜ முதலியார்.

நடராஜ முதலியார் 1917ல் எடுத்த தனது இரண்டாவது படமான ‘திரௌபதி வச்திராபராணம்’ படத்தில் மரின் ஹில் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண் ணைக் கதாநாயகியாய் நடிக்க வைத்தார். இவருக்கு லியோச்சனா எனப் பெயர் சூட்டினார். மௌனப் படங்களில் அதிகச் சம்பளம் பெற்ற நடிகை என்ற பெயர் இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் முதல் வெளிப்புற படப்பிடிப்பைச் செய்தவரும் நடராஜ முதலியாரே.

மயில்ராவணா,  மார்க்கண்டேயா போன்ற படங்களுக்குத் தனது சொந்த ஊரான வேலூர் கோட்டையில் படப்பிடிப்பு நடத்தினார். மவுனப்பட தயாரிப்பு களில் நடராஜ முதலியார் பரபரப்பாக இயங்கிவந்த நேரத்தில், 1923ஆம் ஆண்டு அவரது சினிமா ஸ்டூடியோ எதிர்பாராதவிதமாகத் தீக்கிரையானது. அதே ஆண்டு அவருடைய மகன் இறந்தார். மேலும் அவரது சினிமா தொழிலுக்கான ஆதரவு சில காரணங்களால் கிடைக்காத தும், தொடர்ந்த நஷ்டம் காரணமாகவும் சினிமாத் தொழிலைவிட்டு  விலகினார் நடராஜ முதலியார். தமிழ்ப் படத் தயாரிப்புக்கு கால்கோள் செய்த நடராஜ முதலியார், தமிழ்சினிமா வரலாற்றில் தனிப்பெரும் சாதனைக்குரிய மனிதர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...