டெல்லி,
டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி ஜோர்டான் புறப்பட்டு சென்றார்.
4 நாட்கள் அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி இன்று ஜோர்டான் செல்கிறார். இதற்காக டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஜோர்டான் புறப்பட்டு சென்றார்.

ஜோர்டான் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் 2ம் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஜோர்டான் பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி நாளை எத்தியோப்பியா செல்கிறார். எத்தியோப்பியாவிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அங்கும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து ஓமன் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் ஹைதம் பின் தாரிக்கை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
